இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழக பொது சுகாதார துறை சார்பில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை 5 மணி நேரத்தில் கண்டறிய முடியும்

9/14/2021 5:04:05 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

சென்னை: தமிழக பொது சுகாதார துறை சார்பில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம் எந்த வகையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை 5 மணி நேரத்தில் கண்டறிய முடியும். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், சுகாதாரத் துறையின் கீழ் இருக்கும் இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆய்வகத்தை பொறுத்தவரை மரபணு பகுப்பாய்வு கூடம் இந்திய அளவில் ஒன்றிய அரசின் துணையோடு 23 இடங்களில்  நடத்தப்பட்டு வருகிறது. தென்னகத்தை பொறுத்த வரையில் பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இந்த ஆய்வகங்கள் இருக்கிறது. தமிழகத்தில் பெருந்தொற்று காலத்தில் மாதிரிகள் எடுக்கப்பட்டு அந்த மாதிரிகளை வைரஸ் தன்மை குறித்து கண்டறிவதற்கு பெங்களூர், ஐதராபாத் ஆகிய இரண்டு ஆய்வகங்களுக்குதான் மாதிரிகள் அனுப்பப்பட்டு வந்தது.  அந்த மாதிரிகளுக்கான சோதனை முடிவுகளை பொறுத்த வரை ஒரு மாதத்திற்கு மேலான கால இடைவெளியில் சோதனை முடிவுகள் வந்தது.

அதன் அடிப்படையில்தான் மே, ஜூன் மாதத்தில் வந்த கொரோனா நோய்தொற்றில் டெல்டா வைரஸ் 80% ஆதிக்கம் செலுத்தியது என்பதை கண்டறிய முடிந்தது. அதேபோல் டெல்டா பிளஸ் வைரஸ் இருந்ததும் கண்டறிய முடிந்தது. ஒவ்வொரு முறையும் நம்முடைய மாதிரிகளை அனுப்பும் போது மாத கணக்கில் கால அவகாசமும், மிகுந்த பொருட்செலவும் ஏற்பட்டது. ஒரு மாதிரியை பரிசோதனை செய்வதற்கு ரூ.4 ஆயிரம் அளவிலும், போக்குவரத்து செலவோடு சேர்த்து ரூ.5 ஆயிரம் வரை செலவாகும் ஒரு சூழல் இருந்தது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமே தமிழகத்தில் ஒரு ஆய்வகத்தை ஏற்படுத்தலாம் என்று சொல்லி எங்கள் துறையிடம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சொன்னார்.

நிதிநிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்பும் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மையம் ஒன்று மிக சிறப்பாக இயங்கி கொண்டு வருகிறது. அதோடு சேர்த்து, இந்த மரபணு பகுப்பாய்வு கூடம் அமைப்பதற்கு ரூ.4 கோடி செலவாகி இருக்கிறது.  இந்த ஆய்வகம் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு இன்று நாட்டு மக்களுக்கு அர்பணிக்கப்பட்டிருக்கிறது. இந்த மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பணியாற்றுவதற்கு 5 தொழில்நுட்பர்களை ஏற்கனவே பெங்களூருக்கு பயிற்சிக்கு அனுப்பி, அந்த பயிற்சி முடித்தவர்கள் தான் இந்த மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

எனவே தமிழகத்தில் எடுக்கக்கூடிய மாதிரிகளை 5 மணி நேரத்திற்குள்ளாகவே, குறைந்த பொருட் செலவில் சோதனை முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த பகுப்பாய்வு கூடம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மாநில அரசே நேரடியாக இது போன்ற பகுப்பாய்வு கூடத்தை ஏற்படுத்தியதில்லை. முதல்முறை தமிழக அரசு, முதல்வரின் வழிகாட்டுதலின் படி இந்த ஆய்வகம் திறக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



  • 5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!



  • தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]