இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

9/13/2021 5:01:10 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

சென்னை: தமிழகத்தில் குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: வாணியம்பாடியைச் சேர்ந்த வாசிம் அக்ரம், கஞ்சா விற்பனையை காட்டிக் கொடுத்ததன் காரணமாக கூலிப்படையை ஏவி கடந்த 10ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு தேவையான நிதி வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதேபோன்று நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த ஆண்டு தேர்வு நடைபெறாது என்று பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயார் செய்யவில்லை.

சேலம் மாவட்டத்தில் இதனால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். அந்தக் குடும்பத்துக்கு நிதி உதவியும் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலையும் வழங்க வேண்டும் என்றார். பின்னர் அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னை குறித்து பேசினார். வாணியம்பாடி சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 கிலோ கஞ்சா, 3 கத்தி, 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற குற்றம் நடைபெறாமல் இருக்க, இரும்பு கரம் கொண்டு தமிழக அரசு அடக்கும். வாணியம்பாடியில் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர்ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் அதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகுதான் தமிழகத்திற்கு நீட் வந்தது.

அனிதா உள்பட 13 மாணவர்கள் இறந்ததும் அதிமுக ஆட்சியில்தான். இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியதை அவைக்கு தெரிவிக்காமல் மறைத்ததும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிதான். சேலம் மாவட்ட மாணவன், 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததும் எடப்பாடி ஆட்சியில்தான். நீங்கள் கூட்டணியில் இருக்கும்போது, ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தேவைப்பட்டது. அப்போது, தமிழகத்தில் நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், நீட்டுக்கு விலக்கு கிடைத்திருக்கும். ஒன்றிய அரசை, வலியுறுத்தி நீட்டுக்கு விலக்குப் பெற தெம்பு மற்றும் திராணி இல்லாத ஆட்சிதான் உங்கள் ஆட்சி. எனவே, இந்த சட்டமசோதாவை தாக்கல் செய்யும்போது அனைவரும் ஆதரித்து ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் சில
  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



  • 5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!



  • தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]