இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 3 பெண்கள் உட்பட ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின் பதவியேற்பு

8/26/2021 5:35:01 PM
பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் அவர்கள் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகளை நியமனம் செய்வது ெதாடர்பான ‘கொலீஜியம்’ ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 9 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரை பட்டியல் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை. இந்த 9 பேரில் 8 பேர் தற்போது நீதிபதிகளாக உள்ளவர்கள். ஒருவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். ஒன்பது நீதிபதிகளின் பட்டியலில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக கடந்த 17ம் தேதி நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கார், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய கொலீஜியம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் தான் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. கொலீஜியம் முதன்முறையாக ஒரே தீர்மானத்தில் மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் நாகரத்தினா, ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் ஆவர். பதவி ஏற்க உள்ள 9 பேரில், நீதிபதிகள் நாகரத்னா, நரசிம்மா, விக்ரம் நாத் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்த நரசிம்மா, உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 8 பேர் இதுபோல் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் முறைப்படி மேற்கண்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொள்வர் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் ஓய்வு பெற்ற பின், 9 புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதால், இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • சென்னை பொறியாளரை கொன்ற விவகாரம்; ‘சயனைடு’ வழக்கில் ஐகோர்ட் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி



  • ஒன்றிய நிதியமைச்சக அறிவிப்பின்படி தமிழகத்தில் குத்தகைக்கு விடப்படும் அரசின் சொத்துகள் எவை?.. 4 விமான நிலையம், 491 கி.மீ. சாலை அடங்கும்



  • ஒரே ஆண்டில் 43,000 போக்சோ வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்



  • மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஓபிசி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்: ஒன்றிய அரசிதழிலும் வெளியீடு



  • உச்சநீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகள்; 2027ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்?.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பெயரும் பரிந்துரை



  • மோடியின் செல்வாக்கு ஓராண்டில் 42% சரிந்தது; நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர் மு.க.ஸ்டாலின்: தனியார் செய்தி நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல்



  • நாடு முழுவதும் இன்று காலை முதல் அமல்; காஸ் சிலிண்டர் விலை ரூ25 அதிகரிப்பு: சென்னையில் ரூ875.50க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி



  • ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்; ‘பெகாசஸ்’ உளவு குறித்து விசாரிக்க வல்லுனர் குழு: சுப்ரீம்கோர்ட்டில் ஒன்றிய அரசு பதில்



  • நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பு மண்டலங்களை உருவாக்க ரூ100 லட்சம் கோடியில் தேசிய உள்கட்டமைப்பு ‘மாஸ்டர் பிளான்’: 75வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு



  • சாத்தான்குளம் வியாபாரி, மகன் கஸ்டடி மரண வழக்கு; எஸ்ஐ ரகுகணேஷ் தொடர்ந்த ‘ரிட்’ மனு தள்ளுபடி: சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]