இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உச்சநீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகள்; 2027ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்?.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பெயரும் பரிந்துரை

8/18/2021 5:23:11 PM
பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், உயர் நீதிமன்றங்களின் தலைமை  நீதிபதிகளையும் உயர் நீதிமன்றங்களின் இதர நீதிபதிகளையும் நியமிப்பது,  பணியிட மாற்றம் செய்வது, பதவி உயர்வு அளிப்பது ஆகியவற்றுக்கான இறுதி  அதிகாரம் படைத்த அமைப்பே ‘கொலீஜியம்’ என்று கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதியையும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நான்கு மூத்த நீதிபதிகளையும்  சேர்த்து ஐந்து உறுப்பினர்களையும் கொண்டது கொலீஜியம். இவர்கள்,  ஐவரும் கலந்தாலோசித்து வாக்கெடுப்பு நடத்தி, அதிக வாக்கைப் பெறும்  முடிவுகளே கொலீஜியத்தின் முடிவாக அறிவிக்கப்படுகின்றன. கொலீஜியத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசுக்குக் தலைமை நீதிபதி அனுப்புவார். அதன்பின், குடியரசு தலைவரின் பெயரில் அறிவிப்புகள் வெளியாகும்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களை பூர்த்தி செய்தல் தொடர்பாக ஒன்பது புதிய நியமனங்களுக்கான பரிந்துரையை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான குழு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளது. கிட்டதிட்ட 22 மாதங்களுக்குப் பிறகு 9 புதிய நியமனங்களுக்கான பரிந்துரையை அனுப்பப்பட்டுள்ளது. 9 நீதிபதிகளில் மூன்று பேர் பெண் நீதிபதிகள். இவர்களில் ஒருவர் எதிர்காலத்தில் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்த பட்டியலில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பிவி நாகிரத்னா, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்களில், நீதிபதி பிவி நாகரத்னா நாட்டின் முதல் உச்சநீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக முடியும் என்றும், அவர் வரும் 2027ம் ஆண்டுவாக்கில் அந்த பதவிக்கு வருவார் என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது பெண் நீதிபதியாக இந்திரா பானர்ஜி மட்டுமே உள்ளார். அவரும் செப்டம்பர் 2022ல் ஓய்வு பெற உள்ளார். இதுவரை எட்டு பெண் நீதிபதிகள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் பணி ஓய்வு பெற்றார். இவரது பணி ஓய்வுக்கு பின்னர், இந்த 9 நீதிபதிகள் பரிந்துரைகள் வந்துள்ளன. நீதிபதி நாரிமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொலீஜியத்தில் உறுப்பினராக இருந்தார். இவர், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷி ஆகியோரின் பெயரை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இவர்கள் பெயர்கள் தற்போது பரிந்துரைக்கப்படவில்லை. மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி ஆகியோரின் பெயர்களும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்ஹா பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரது பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும். நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக இருக்கும். இதற்கிடையே, நீதிபதி நவீன் சின்ஹா ​​ஒரு சில நாட்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 3 பெண்கள் உட்பட ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின் பதவியேற்பு



  • சென்னை பொறியாளரை கொன்ற விவகாரம்; ‘சயனைடு’ வழக்கில் ஐகோர்ட் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி



  • ஒன்றிய நிதியமைச்சக அறிவிப்பின்படி தமிழகத்தில் குத்தகைக்கு விடப்படும் அரசின் சொத்துகள் எவை?.. 4 விமான நிலையம், 491 கி.மீ. சாலை அடங்கும்



  • ஒரே ஆண்டில் 43,000 போக்சோ வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்



  • மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஓபிசி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்: ஒன்றிய அரசிதழிலும் வெளியீடு



  • மோடியின் செல்வாக்கு ஓராண்டில் 42% சரிந்தது; நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர் மு.க.ஸ்டாலின்: தனியார் செய்தி நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல்



  • நாடு முழுவதும் இன்று காலை முதல் அமல்; காஸ் சிலிண்டர் விலை ரூ25 அதிகரிப்பு: சென்னையில் ரூ875.50க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி



  • ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்; ‘பெகாசஸ்’ உளவு குறித்து விசாரிக்க வல்லுனர் குழு: சுப்ரீம்கோர்ட்டில் ஒன்றிய அரசு பதில்



  • நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பு மண்டலங்களை உருவாக்க ரூ100 லட்சம் கோடியில் தேசிய உள்கட்டமைப்பு ‘மாஸ்டர் பிளான்’: 75வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு



  • சாத்தான்குளம் வியாபாரி, மகன் கஸ்டடி மரண வழக்கு; எஸ்ஐ ரகுகணேஷ் தொடர்ந்த ‘ரிட்’ மனு தள்ளுபடி: சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]