இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஒன்றிய அரசின் கடல் சார் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் 20 ஆயிரம் மீனவர்கள் ஸ்டிரைக்

8/9/2025 5:07:17 PM
சென்னையில் 9 இடங்களில் இன்று மீண்டும் கடைகள் திறப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன்: ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் கடன் சுமை..! வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர் தியாகராஜன்

சென்னை: ஒன்றிய அரசின் கடல்சார் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தற்போது நடைபெற்று வரும் மழைகால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ள 21 மசோதாக்களில் ஒன்றான கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021) மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதாவின் படி மீனவர்கள் 12 கடல் மைலுக்கு உள்ளே மீன்பிடிக்க வேண்டும்; எந்த மீன்களை பிடிக்கச் செல்கிறோம் என்பதை கரையில் அதிகாரிகளிடம் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட மீன் வகை தவிர வேறு வகை மீன்களை மீனவர்கள் பிடித்திருந்தால் அவைகளை கடலிலேயே விட்டு விட வேண்டும். மீனவர்கள் சட்டத்திருத்த வரைவுகளை மீறி செயல்பட்டால் முதல் முறை அபராதமும், 2வது முறை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும், மூன்றாம் முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட மீனவர் மீண்டும் தொழில் செய்ய முடியாதபடி கடும் நடவடிக்கைகள் எடுக்க வழி வகுக்கிறது.

இது மீனவர்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கை என்று கூறி தமிழகம் முழுவதும் இன்று மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிக்குப்பம் அருகே பல்வேறு மீனவர் அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக லைட் ஹவுஸ் அருகே வரை வந்தனர். அங்கு போலீசார் அவர்களை மறித்தனர். இதைத் தொடர்ந்து 30 நிமிடத்துக்கு மேல் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர். சென்னையில் பல்வேறு மீனவர் பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கடலோர கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நெல்லை கலெக்டரை சந்தித்து மனுவும் கொடுத்தனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்கத்தினர் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் போல் நாட்டு படகுகளும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. கோவளம் புனித இஞ்ஞாசியார் ஆலய கொடிமரம் முன்பு மீனவர்கள் திரண்டு ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கோவளம் பங்கு தந்தை கிஷோர் தலைமை வகித்தார். துணை பங்கு தந்தை ஜார்ஜ்புஷ், பங்கு பேரவை துணை தலைவர் ஜூலியஸ், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் ரெஜி, ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய சவுமியா, ஊராட்சி தலைவர் ஸ்டெனி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பள்ளம் கடற்கரையில் மீனவ கிராம மக்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று மீன்வள மசோதாவை திரும்பி பெற கோரியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்யும் மசோதாவை கொண்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: இந்த மசோதா அமலுக்கு வந்தால் கடற்கரை பகுதிகள் பாரம்பரிய மீனவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கார்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படும். கார்பரேட் நிறுவனங்கள் வழங்கும் இடத்தில் மட்டுமே பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகும் என்றனர்.

மேலும் சில
  • சென்னையில் 9 இடங்களில் இன்று மீண்டும் கடைகள் திறப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை



  • கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன்: ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் கடன் சுமை..! வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர் தியாகராஜன்



  • ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: 9 மாவட்ட திமுக செயலாளர்கள் பங்கேற்பு



  • அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடுகள்: வெள்ளை அறிக்கை நாளை வெளியீடு..! அரசியல் சூட்டை கிளப்பும் என எதிர்பார்ப்பு



  • 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • மூன்றாம் ஆண்டு நினைவு தினம்: கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை..! தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்



  • ஊரடங்கு விதி மீறல்: முகக்கவசம் அணியாத 769 பேர் மீது வழக்கு..! போலீசார் நடவடிக்கை



  • தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 9ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!



  • அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் உடலுக்கு மலர் மாலை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி



  • சென்னை புழல் உள்பட தமிழகம் முழுவதும் சிறைகளில் ரெய்டு: செல்போன்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]