இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறி லவ்லினா அசத்தல்..! இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி

7/30/2021 4:55:09 PM
கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான 2வது பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார். இன்று நடந்த 69 கிலோ எடைப்பிரிவு மகளிர் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா, சீன தைபேவை சேர்ந்த நியென் சின் சென்னுடன் மோதினார். மொத்தம் நடந்த 5 ரவுண்ட்களில் லவ்லினா, 4-1 என்ற கணக்கில் நியன் சின் சென்னை வீழ்த்தி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். முதல் ரவுண்டில் 30-27 என்ற கணக்கிலும், 2வது ரவுண்டில் 29-28 என்ற கணக்கிலும் லவ்லினா கைப்பற்றினார். 3வது ரவுண்டை 29-28 என்ற கணக்கில் நியென் சின் சென் கைப்பற்றினார்.

ஆனால் 4வது மற்றும் 5வது ரவுண்டை 30-27 என்ற கணக்கில் கைப்பற்றி, இப்போட்டியில் லவ்லினா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கான மற்றொரு ஒலிம்பிக் பதக்கத்தை லவ்லினா உறுதி செய்துள்ளார். குத்துச்சண்டையில் அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் வெண்கலம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பளு தூக்குதல் பிரிவில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை மீரா பாய், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோவில் வரும் ஆக.4ம் தேதி 69 கிலோ எடைப்பிரிவு மகளிர் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் துருக்கியை சேர்ந்த புசெனஸ் சர்மெநெலியுடன், லவ்லினா மோதவுள்ளார்.இன்று நடந்த மற்றொரு காலிறுதியில் புசெனஸ், உக்ரேன் வீராங்கனை அன்னா லிசென்கோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும் சில
  • கேகேஆரை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி



  • பைனலில் கேகேஆருடன் இன்று பலப்பரீட்சை: கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: மகுடம் சூடும் அணிக்கு 10 கோடி பரிசு



  • இன்று குவாலிபயர் 2 போட்டி: கொல்கத்தா பவுலிங்கை சமாளிக்குமா டெல்லி?



  • இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட் ஓவலில் நாளை தொடக்கம்: அஸ்வினுக்கு இடம்



  • டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இன்று ஒரே நாளில் 4 பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்: வட்டு, ஈட்டி எறிதலில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம்



  • பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்



  • நீதிமன்ற உத்தரவால் தடகள போட்டியில் பங்கேற்க போலந்து செல்கிறார் குமரி மாணவி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் மகிழ்ச்சி



  • அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து



  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி



  • ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]