இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

7/29/2021 5:12:24 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம், மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான நித்யகல்யாண பெருமாள் கோயிலை இன்று காலை 7 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். புதிதாக கட்டப்படும் திருமண மண்டபம், பிரகார மண்டபம், உணவருந்தும் கூடம், கோயில் தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் சுமார் 1000 ஆண்டு பழமைவாய்ந்தது. தமிழகத்தில் 1000 ஆண்டுகள் கடந்த கோயில்களில், அந்தந்த திருக்கோயிலுக்கு சொந்தமான தேர்கள், குளங்கள், நந்தவனங்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து இன்று நித்யகல்யாண பெருமாள் கோயிலில் உள்ள மண்டபங்கள், தெப்பக்குளம், கழிவறைகள், நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அதேபோல் இங்கு கட்டி முடிக்கப்பட்டு உள்ள கழிவறை, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இக்கோயில் குளத்தை சுற்றி பூத்து குலுங்கும் வகையில் செடிகள் நட்டு, நீர் ஊற்றி பராமரிக்கப்படும். இது, மிகப் பழமையான கோயிலாக உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தில் மிக விரைவில் திருமண மண்டபம் கட்டப்படும். அதேபோல் கோயிலின் உள்பகுதியில் கற்கள் பதிக்காத இடத்தில் செடி,கொடிகள் வளர்த்து பராமரிக்கப்படும். 4 ஏக்கர் நிலத்தில், இக்கோயிலை சுற்றி பூங்கா அமைக்கப்படும். மேலும், மாமல்லபுரத்தில் இருந்து திருவிடந்தை வரையுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் அரசு கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த ஆய்வில் அமைச்சர்களுடன் முதன்மை செயலாளர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயராமன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் திமுக எம்எல்ஏ இதயவர்மன், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்



  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]