இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

7/26/2021 5:30:05 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகள் மற்றும் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக எஸ்ஐ பணியிடங்களுக்கு 968 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு 62 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இவர்களுக்கு் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தலா 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். குற்ற நிகழ்வுகளில் புலன் விசாரணை செய்யவும், குற்றச் செயல்களுக்குத் தண்டனை பெற்றுத் தரும் துறையாக மட்டுமின்றி, குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கும் துறையாகவும் காவல்துறை செயல்பட வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணமாகும். அந்த உயரிய குறிக்கோள்களை நிறைவேற்ற, காவல் துறையைப் பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 968 பேரில், தாலுகா காவல் நிலையங்களுக்கு 660 பேரும், ஆயுதப்படைக்கு 225 பேரும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு 39 பேரும் பணி அமர்த்தப்படுவார்கள். 

இதில் 281 பெண் எஸ்ஐகளும் அடங்குவர். இவர்கள் தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் ஓர் ஆண்டுகாலம் அடிப்படை பயிற்சி பெறுவார்கள். குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைக் கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப் பொருள்களை அறிவியல் ஆய்வு மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உதவுவதே தடய அறிவியல் துறையின் இளநிலை அறிவியல் அலுவலர்களின் முக்கியப் பணியாகும். இத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 62 இளநிலை அறிவியல் அலுவலர்கள் மாநகரங்கள் மற்றும் மாவட்ட ஆய்வுக் கூடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி (நிர்வாகம்) எம்.ரவி, தடய அறிவியல் துறை இயக்குநர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் சில
  • 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்



  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]