இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஒன்றிய அரசு வழங்காமல் இழுத்தடித்து வருவதால் தமிழகத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றம்

6/30/2021 4:58:41 PM
முதல்வரான பிறகு முதன் முறையாக காஞ்சி வருகை: அண்ணா இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை :மக்களுக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என பேட்டி தமிழகத்தின் 30வது டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றார்: திரிபாதிக்கு மாலையில் பிரிவு உபசார விழா

சென்னை:  கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசிதான் என்ற நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தடுப்பூசியை தராமல் காலம்தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்றைய நிலையில் தடுப்பூசி தமிழகத்தில் இல்லை என்ற நிலை உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு  தடுப்பூசி மருந்து போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியை ஆரம்ப கட்டத்தில் பொதுமக்கள் போட தயக்கம் காட்டினர். இதனால், அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி முகாம்களில் குறைந்த அளவிலேயே தடுப்பூசி போட மட்டுமே ஆர்வம் காட்டினர்.

இந்த நிலையில்தான் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனாவில் 2வது அலை வேகமாக பரவியது. அதன்படி இந்தியா முழுவதும் தினசரி பாதிப்பு 4.25 லட்சத்தையும் தாண்டியது. இந்த நிலையில்தான், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே கொரோனா தொற்று வராமல் தடுப்பது அல்லது கொரோனா வந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி போட ஆர்வமுடன் மருத்துவமனைக்கு வந்தனர். அதேநேரம்,  தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.  இதனால் போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை ஒன்றிய அரசிடமிருந்து கடந்த 28ம் தேதி நிலவரப்படி இதுவரை ஒரு கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கூடுதலாக 2 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. தமிழகத்தில் தினசரி சுமார் 3.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் நிலையில் வெறும் 2 லட்சம் தடுப்பூசி ஒருநாள் கூட பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில் நேற்றும், இன்னும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக 18 வயது முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக காலையிலேயே வந்தனர். ஆனால், தடுப்பூசி இல்லாததால் இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஒன்றிய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. அங்கு பணம் கொடுத்தால் மட்டுமே தடுப்பூசி போட முடியும்.  இதனால் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு 90 சதவீதம் தடுப்பூசியை வழங்க வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் தேங்கியுள்ள தடுப்பூசிகளையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதற்கும் ஒன்றிய அரசு பதில் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை முதல் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை என மாநிலம் முழுவதுமே தடுப்பூசிக்காக மக்கள் காத்திருந்து, திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

சென்னையில் வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வந்த மக்களும், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒன்றிய அரசு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பல மாநிலங்களில் மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். விருப்பமும் இல்லாமல் உள்ளனர். ஆனால் அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்வதால் அங்கு கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசியும் வீணாக்கப்படுகிறது. இதுபோன்று தமிழகத்தில் இல்லாததால், உடனடியாக ஒன்றிய அரசு, தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சில
  • முதல்வரான பிறகு முதன் முறையாக காஞ்சி வருகை: அண்ணா இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை :மக்களுக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என பேட்டி



  • தமிழகத்தின் 30வது டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றார்: திரிபாதிக்கு மாலையில் பிரிவு உபசார விழா



  • நாளை மறுநாளுடன் திரிபாதி ஓய்வு: தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?.. ஒன்றிய அரசுடன் தமிழக அதிகாரிகள் ஆலோசனை



  • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தடகள பயிற்சியாளர் குண்டர்சட்டத்தில் கைது: புகார்கள் குவிந்துவருவதால் பரபரப்பு



  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் புதிய தளர்வு: வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு: 27 மாவட்டங்களில் 9333 பஸ்கள் இயக்கம்



  • தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்கள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்ம நபர் தந்த விஷ மாத்திரை தின்ற 2 பெண்கள் பரிதாப பலி



  • தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை சேரனை தாக்கிய பாகனின் உதவியாளர் சஸ்பெண்ட்: பார்வை பறிபோன பரிதாபம்



  • 13வது நாளாக இன்றும் விர்ர்ர்....: தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் சதமடித்தது பெட்ரோல் விலை: கடலூர் உள்பட 5 மாவட்டங்களில் 100-ஐ தாண்டியது



  • தலைவர்கள் பற்றி அவதூறாக பேசிய கிஷோர் கே.சாமி புழல் சிறையில் அடைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]