இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ₹5 லட்சம் நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

6/16/2021 5:00:06 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ₹5 லட்சம் டெபாசிட் மற்றும் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா என்ற கொடிய நோய் ஏழை, பணக்காரர், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் தாக்கி வருகிறது. பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற, அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நோய் தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும், கொரோனா நோய்க்கு கணவன், மனைவி இருவரும் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைகள் அனாதையாகிவிடுகின்றனர்.

இதையடுத்து, நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களை பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கடந்த மாதம் 29ம் தேதி ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

* கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ₹5 லட்சம் வைப்பீடு (டெபாசிட்) செய்ய வேண்டும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.
* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.
* இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.

* கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக ₹3 லட்சம் வழங்கப்படும்.
* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா ₹3 ஆயிரம் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.
* ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ₹5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்பு குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

* அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.
* மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளை சார்ந்தவர்களை கொண்டு அமைக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது.

தமிழக முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் கமல் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த திட்டத்தை இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், கொரோனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்



  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]