இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரி ஆயுதங்களுடன் 3ம் உலகப்போருக்கு தயாரான சீனா: அமெரிக்க புலனாய்வு துறை அறிக்கையில் பகீர்

5/9/2025 5:05:35 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

வாஷிங்டன்: கடந்த 6 ஆண்டுகளாக கொரோனா போன்ற உயிரி ஆயுதங்களுடன் 3ம் உலகப்பேருக்கு சீனா தயாராகி வருவதாக அமெரிக்க வெளியுறவு துறையின் புலனாய்வு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் வூஹான் மகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகையே புரட்டிப் போட்டுள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பலியான நிலையில், தற்போது பல நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி போட்டு காப்பாற்றி வருகின்றன. இருந்தும், கொரோனாவின தாக்கத்தில் இருந்து எந்த நாடும் வெளியாக முடியவில்லை.

கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் சீனா தான், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் குற்றம்சாட்டி வந்தாலும் கூட, சீனா அதனை மறுத்து வருகிறது. உலக சுகாதார நிறுவனமே, சீனாவிற்குள் நடக்கும் சுகாதார முறைகளை அறிய முடியாத நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் புலனாய்வாளர்கள் பிரிவு தற்போது வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் ‘மெயில் ஆன்லைன்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், ‘சீன விஞ்ஞானிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உள்ளிட்ட உயிரி மற்றும் மரபணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றனர்.

இவர்கள் உயிரி ஆயுதங்களை பரப்பி, மூன்றாம் உலகப் போருக்கு தயாராகி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் ‘சார்ஸ்’ வகை கொரோனா வைரசை பரிசீலித்தது. இதுவே கோவிட்-19 வைரஸ் உருவாக்கியதற்கான அடிப்படையாக இருந்தது.
மக்கள் விடுதலை ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் பெறப்பட்ட தகவலின்படி, ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ‘சார்ஸ்’ கொரோனா வைரஸ்களின் திறனை ேசாதிக்கும் போது, சீன ஆய்வகத்தில் பணியாற்றிய அதிகாரிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தோன்றியதா?

என்ற மர்மம் நீடிக்கும் நிலையில், வூஹான் வைராலஜி நிறுவனம் ‘சார்ஸ்’ தொற்று பரவியதில் இருந்தே வவ்வால்களின் மூலக்கூறுகளில் இருந்து ஏராளமான வைரஸ்களை சேகரித்து வருகிறது. இந்த வவ்வால் வைரஸ்கள், மனித செல்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதற்கான ஆய்வு முடிவுகளும் கிடைத்துள்ளன. கொரோனா பேரிடர் பரவியதற்கு முன்பாகவே, கொரோனா வைரசை ஆயுதமாகப் பயன்படுத்தி சீனா மூன்றாம் உலகப்போருக்கு திட்டமிட்டுள்ளது. புதிய யுகத்தின் ஆயுதமாக தொற்று நோய்க்கிருமிகளை ஏவ சீனாவின் ராணுவ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு கிடைத்த புதிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் சில
  • தமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு



  • குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பு: இன்று கமலா ஹாரிஸை சந்திக்கிறார்



  • பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு மாகாணம் மீது விமான தாக்குதல் நடத்தியது பாக்.: தேசிய எதிர்ப்பு முன்னணி கடும் கண்டனம்



  • பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்: துப்பாக்கிச்சூடு கொண்டாட்டத்தில் சிலர் பலி: சிறுவர்கள் உட்பட பலர் காயம்



  • இரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் ட்ரோன் தாக்குதல் வரை ரத்த களறிக்கு மத்தியில் ஆப்கானை விட்டு வெளியேறியது அமெரிக்கா



  • ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி



  • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி



  • பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி



  • 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி



  • பெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற!- ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]