இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்

4/10/2025 5:41:35 PM
கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

அண்ணாநகர்: சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி (46). கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். வடபழனி மாநகர போக்குவரத்து பணிமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தவர் முத்து (48). இவர் அவ்வப்போது, கோயம்பேடுக்கு வரும்போது, சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள 4வது பிளாட்பார்மில் சாந்தி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். அப்போது பெட்ரோல் கேனுடன் முத்து வந்தார். திடீரென, சாந்தி மீது பெட்ரோலை ஊற்றி விட்டு, தன் மீதும் முத்து ஊற்றி கொண்டார். பின்னர் தீக்குச்சியை உரசி, சாந்தி மீது போட்டு விட்டு, தன் மீதும் தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதில் இருவரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அப்பகுதியில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மற்றும் கடை வியாபாரிகள் அலறியடித்து எழுந்தனர். சிலர் அங்கும் இங்குமாக ஓடினர்.

தகவலறிந்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருவரது உடலிலும் பரவியிருந்த தீயை, சுமார் 2 மணி நேரம் போராடி போலீசார் அணைத்தனர். பின்னர், இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.இச்சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், ‘கடந்த சில ஆண்டுகளாக முத்துவுக்கும் சாந்திக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வேறு ஒருவருடன் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் முத்துக்கு தெரியவந்தது. இதை சாந்தியிடம் கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த ஆத்திரத்தில் இன்று அதிகாலை சாந்தியை தீ வைத்து எரித்துவிட்டு முத்துவும் தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தினால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் சில
  • டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டி கொலை; தடுத்தவருக்கும் வெட்டு



  • சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டு 13 லாரிகளில் கடத்தப்பட்ட 4 டன் குட்கா மின்சாதன பொருட்கள் அதிரடி பறிமுதல்: அதிகாரிகளுடன் வடமாநில கும்பல் மோதல்



  • நாளை மறுநாள் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை



  • பப்ஜி விளையாட்டில் கோடி கணக்கில் சுருட்டல்: ஆபாசமாக பேசி சிறுமிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய யூ டியூப்பர் மதன் எங்கே?: பொறிவைத்து தேடும் தனிப்படை



  • குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதால் திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை



  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]