இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்

4/6/2025 5:47:30 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. எட்டுகட்டமாக மேற்குவங்கத்தில் தேர்தலை அறிவித்ததில் சதி நடந்துள்ளது என்று மம்தா குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்கம் மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு கட்டங்களாக 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். சுமார் 78.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 205 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் வரும் 10, 17, 22, 26, 29ம் ஆகிய தேதிகளில் அடுத்தக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 86 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டத்தில் 337 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் 320 பாதுகாப்புப் படைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அசாம், கேரளா, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. ஆனால் மேற்குவங்கத்தில் மட்டும் பலகட்டங்களாக வாக்குப்பதிவு நடத்துவது ஏன்? கொரோனாவை காரணம் காட்டி அவர்கள் (பாஜக) சதித்திட்டம் செய்துள்ளனர். அதனை நாங்கள் முறியடிப்போம். மேற்குவங்காளத்தில் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



  • பெண் கொரோனா நோயாளி மரணம்: மருத்துவமனைக்கு உறவினர்கள் தீவைப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]