இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

3/16/2021 6:35:03 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

லண்டன்: ரத்து கட்டு ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து 9 நாடுகளில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டிரா ஜெனிகா, கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டு கொண்ட பின்னர் ஆஸ்திரியா நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்ததால், அந்நாடு இந்த தடுப்பூசிக்கு தடை விதித்தது. தொடர்ந்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசியை தடை செய்தன.  

ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு ரத்த கட்டு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரிய வந்துள்ளன என அந்நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன. நார்வே அரசு கடந்த சனிக்கிழமை இந்த தடுப்பூசிக்கு தடை விதித்தது. தொடர்ந்து அயர்லாந்து அரசும் கடந்த ஞாயிற்றுகிழமை தற்காலிக தடை விதித்தது.  இந்நிலையில், நெதர்லாந்து அரசும்  தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைத்தது. இருந்தும், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து வைத்துள்ள பரிசோதனை தரவுகளின் அடிப்படையில், ரத்த கட்டு ஏற்படுவதற்கான ஆபத்து பற்றிய எந்த சான்றுகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியால் இன்றுவரை ரத்த கட்டு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. தடுப்பூசி போடுவது தொடர வேண்டும்.  அதனாலேயே நாம் உயிர்களை காக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளது. இன்றைய நிலையில், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 9 நாடுகள் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தடை விதித்து உள்ளன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ‘மக்களிடையே பீதியை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எல்லா நாடுகளுக்கும் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறோம். பல நாடுகள் ரத்த உறைவு பற்றி புகார் கூறுகின்றன. இந்த சம்பவங்களுக்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றார்.

மேலும் சில
  • தமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு



  • குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பு: இன்று கமலா ஹாரிஸை சந்திக்கிறார்



  • பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு மாகாணம் மீது விமான தாக்குதல் நடத்தியது பாக்.: தேசிய எதிர்ப்பு முன்னணி கடும் கண்டனம்



  • பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்: துப்பாக்கிச்சூடு கொண்டாட்டத்தில் சிலர் பலி: சிறுவர்கள் உட்பட பலர் காயம்



  • இரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் ட்ரோன் தாக்குதல் வரை ரத்த களறிக்கு மத்தியில் ஆப்கானை விட்டு வெளியேறியது அமெரிக்கா



  • ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி



  • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி



  • பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி



  • 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி



  • பெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற!- ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]