இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

2/25/2021 5:40:30 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆகவும், 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 7ம் தேதி கொரோனா நெருக்கடி காலத்தின் போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது. தமிழக அரசின் இந்த அரசாணை அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘‘அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது அரசு பணியாளர், அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், சங்கங்கள், ஆணையங்கள் உள்பட பொதுத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பொருந்தும். இந்த புதிய முறை 31.5.21ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’.

இதே போல் முதல்வர் எடப்பாடி வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில்,‘‘தற்போது தமிழகத்தில் தளர்வுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையால் தமிழகத்தில் தொற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. மற்ற மாணவர்கள் ஆன்லைன், தொலைக்காட்சி, இணையதளம் மூலமும் கல்வி பயின்ற வருகின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்க்கொண்டும் வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2020-2021ம் கல்வியாண்டிற்காக 9 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொது தேர்வு எதுவுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள்” என்று அறிவித்தார்.

மேலும் சில
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி



  • ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்



  • சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை



  • தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் கொரோனாவுக்கு பலி:



  • இந்திய கம்யூனிஸ்ட், பாஜ வேட்பாளர்களுக்கு கொரோனா



  • கொரோனா பாதிப்பு தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை



  • மேற்குவங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் 44 சட்டமன்ற தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு: மத்திய அமைச்சர் உட்பட 3 பாஜ எம்பிக்கள் போட்டி



  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: இரவு நேர ஊரடங்கு அறிவிக்கவும் திட்டம்



  • ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடு 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]