இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை

2/24/2021 5:03:38 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ், கூட்டணி தலைவர்கள், தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படுவர் என ராகுல்காந்தி எம்பி தெரிவித்துள்ளார். கேரளாவில் விரைவில் வர உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா ‘ஐஸ்வர்ய யாத்திரை’ என்ற பிரசார பேரணியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காசர்கோட்டில் தொடங்கினார். இந்த பேரணி நேற்று திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. அதன் நிறைவு விழா சங்குமுகத்தில் நடந்தது. இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி, கடந்த 21ம் தேதி மாலை கேரள மாநிலம் வயநாடு வந்தார். 22ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் மதியம் திருக்கைப்பட்டாவில் இருந்து மட்டில் வரை நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்றார்.

இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்ய யாத்திரை’ நிறைவு விழாவில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்ேபாது விவசாயிகள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள், மீனவர்கள், முதியவர்கள் உள்பட பொதுமக்களின் கவலைகள், துன்பங்கள், எதிர்கொண்ட துரோகத்தையும் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், ‘கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மக்களுக்கான அறிக்கையை தயாரிக்கிறது. இதில் மக்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் வழங்கும் ஒரு ‘நியாயமான’ திட்டம், மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்கும் சுகாதார காப்பீட்டு திட்டம் மற்றும் அனைவருக்கும் காப்பீட்டு திட்டம் ஆகியவை அடங்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை இழக்கவும் முடியாது.இங்குள்ளவர்கள் அறிவுள்ளவர்களாகவும், பிரச்னைகளை பற்றி பேச ஆர்வமாகவும் உள்ளனர். டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் தினமும் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை ஏழைகளுக்காக மத்திய அரசு செலவழிக்கவில்லை. சூப்பர் பணக்காரர்களுக்கு உதவ எரிபொருள் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில் மற்றும் பஸ் பயணத்திற்கு ₹300 செலுத்த தயங்கிய மத்திய அரசு, பெரிய நிறுவனங்களுக்கும், சூப்பர் செல்வந்தர்களுக்கும் ₹1.5 லட்சம் கோடி வரிவிலக்கு அளித்துள்ளது. கேரள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ், கூட்டணி தலைவர்கள், தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படுவர்’ என்றார். வட இந்திய தொகுதியில் 15 ஆண்டுகளாக எம்பியாக இருந்த ராகுல்காந்தி, தற்போது கேரளாவில் இருந்து மக்களவை உறுப்பினராக இருப்பது அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இதற்கிடையே தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அரசு வேலை வழங்காமல், தற்காலிக பணியாளர்களாக உள்ள கம்யூனிஸ்ட் தொண்டர்களை கேரள அரசு பணி நிரந்தரம் செய்வதை கண்டித்து நடத்தப்படும் போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]