இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

2/23/2021 5:05:42 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

மீனம்பாக்கம்: கொரோனா வைரசின் 2வது அலை மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு இன்று காலையில் இருந்து கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பொதுமக்களை ஆட்டி படைத்து வருகிறது. இதனால் கடந்தாண்டு ஜனவரி 22ம் தேதியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை நடந்தது. தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து மருத்துவ பரிசோதனையும் தளர்த்தப்பட்டது. கடந்த அக்டோபரில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால், அவர்களுக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை கிடையாது என்ற விதிமுறையை சுகாதார துறையினர் அமல்படுத்தினர். இதனால் வெளிநாட்டு பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனையின்றி, சான்றிதழை காட்டிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகளவில் உள்ளது. அதைப்போல் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை சான்றிதழில் போலி சான்றிதழ்களும் வருவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை முதல், வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும், கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் அந்தந்த நாடுகளில் எடுத்த கொரோனா வைரஸ் மருத்துவ சான்றிதழை காட்டிவிட்டு செல்லலாம். தவிர துபாய், சார்ஜா, அபுதாபி, குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், வியட்நாம், இலங்கை, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த நாடுகளில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கட்டாயமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்காக ரூ.1,200, ரூ.2,500 என்று 2 விதமான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,200 கட்டண பரிசோதனை செய்தால் முடிவு 6 மணியில் இருந்து 8 மணி நேரத்திற்குள் கிடைக்கும். ரூ.2,500 கட்டண பரிசோதனை செய்தால் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் முடிவு கிடைக்கும். இந்த முடிவு வரும் வரை சுகாதார துறையினரின் கண்காணிப்பில் பயணிகள் இருப்பார்கள். பாசிட்டிவ் ரிசல்ட் வரும் பயணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விமான பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]