இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

புதுவை சட்டசபையில் நாளை பலப்பரீட்சை: டிஜிபி தலைமையில் பலத்த பாதுகாப்பு

2/21/2021 6:19:29 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

புதுச்சேரி: புதுச்சேரியில் 2016 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், திமுக ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளுங்கட்சியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது.
ஆனால் எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ் 7, அதிமுக 4 என 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த இவர்கள் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் தங்களின் பலம் 14 ஆக இருப்பதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், பாஜ மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் புதிய கவர்னராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜனிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் மனுவை வழங்கினார். இந்த சந்திப்புக்குபின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் நாராயணசாமி 22ம்தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன்பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை தனித்தனியாக நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த முதல்வர் நியமன எம்எல்ஏக்களுக்கு, அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதியில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருந்தார். மேலும் கவர்னரே, நியமன எம்எல்ஏக்களை பாஜ பட்டியலில் சேர்த்து தெரிவித்திருப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழிசைக்கு கடிதம் எழுதினார். திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் கவர்னரின் இந்த செயலை விமர்சித்திருந்தனர். இதனிடையே சட்டசபை சிறப்பு கூட்டம் 22ம்தேதி (நாளை) காலை 10 மணிக்கு கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் விவகாரத்தில் சபாநாயகர் வி.பி சிவக்கொழுந்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்பதை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனிடையே இன்று மாலை முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் நாளைய சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது, சபையில் எவ்வாறு செயல்படுவது, நியமன எம்எல்ஏக்களுக்கான வாக்குரிமை தொடர்பாக விவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அதன்பிறகு அரசுக்கான பெரும்பான்மை நிரூபிக்கும் விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி அதிரடி முடிவுகளை எடுப்பார் என தெரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை தைரியமாக எதிர்கொள்வாரா அல்லது கடைசி நேரத்தில் எடியூரப்பா பாணியில் ராஜினாமா முடிவுக்கு அவர் செல்வாரா, எம்எல்ஏக்களில் யாராவது கடைசி நேரத்தில் சபைக்கு வராமல் கல்தா கொடுத்து அதிர்ச்சி கொடுப்பார்களா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால் சட்டசபையை சுற்றிலும் நாளை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு பாதுகாத்தல், வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்தல் ஆகியவற்றுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா தலைமையில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எம்எல்ஏக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தமிழசை உத்தரவிட்டுள்ள நிலையில் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக மட்டுமின்றி, காங்கிரசும் முயற்சிப்பதாக தகவல் வெளியாகின. இதையடுத்து கவர்னரின் உத்தரவுக்கிணங்க புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]