இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை: 19 நாளில் 13 முறை விலை உயர்வு

2/19/2021 6:01:29 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

போபால்: மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை கடந்த நிலையில் கடந்த 19 நாளில் 13 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.100.25க்கும், டீசல் ரூ.90.35க்கும் விற்பனையானது. வாட் (மதிப்புக் கூட்டப்பட்ட வரி), லாரி வாடகை போன்றவற்றின் காரணமாக எரிபொருள் விலை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பெட்ரோலுக்கு அதிகபட்ச வாட் வரி விதிக்கப்படுகிறது.

அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் வரி விதிக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 33 சதவீத வாட் வரியுடன் 4.50 ரூபாயும், ஒரு சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசலுக்கு 23 சதவீத வரியுடன் ரூ.3, ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. இன்றைய நிலையில், தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை 31 பைசாவும், டீசல் விலை 33 பைசாவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்த மாதத்தில் 13வது முறையாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ெபட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வரும்நிலையில், மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறுகையில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். சூரிய மற்றும் மின்சார ஆற்றலைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்க மத்திய அரசு விரும்புகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால், தற்போது விலை அதிகரித்துள்ளது’ என்றார்.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]