இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா தளர்வுக்கு மத்தியில் விமான பயண கட்டணம் 30% அதிகரிப்பு:போக்குவரத்து அமைச்சகம் தகவல்

2/12/2025 6:17:09 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

புதுடெல்லி: கொரோனா தளர்வுக்கு மத்தியில் விமான பயண கட்டணம் 30% அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டல் முறைப்படி மே 25ம் தேதி முதல் விமான சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. விமான பயணத்தின் நேரம் அடிப்படையில், 7 பிரிவுகளாக பிரித்து, அவற்றுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கட்டணங்களுக்கான உச்சவரம்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று உயர்த்தியது. 10 சதவீதம் முதல் 30 சதவீதம்வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் கட்டண உயர்வு, மார்ச் 31ம் தேதி வரையோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று கூறியுள்ளது.

அதன்படி, 40 நிமிடத்துக்கு குறைவான பயணத்துக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து 2,200 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ. 7,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 40 முதல் 60 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,800 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.9,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 60 முதல் 90 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.11,700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

90 முதல் 120 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,900 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.13 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 120 முதல் 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.16,900 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், 150 முதல் 180 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,100 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.20,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 3 மணி முதல் மூன்றரை மணி நேர பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.7,200 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.24,200 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 3ம் தேதியில் இருந்து, 80 சதவீத விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி, மார்ச் 31ம் தேதிவரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]