இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தியாவின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

2/11/2025 5:16:07 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: இந்திய அரசின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசின் புகார்கள் குறித்து டுவிட்டர் நிறுவனம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ள மத்திய அரசு, டுவிட்டரின் இந்தப் போக்கு தொடர்ந்தால், அந்நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், டுவிட்டர் மூலம் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அந்த பதிவுகளை தொடர்ந்து ‘விவாயிகளின் போராட்டம், விவசாயிகளை காப்பாற்றுவோம்’ என்ற ஹேஷ்டாக்குகள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

‘இந்த பதிவுகள் பலவற்றில் உண்மைத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. உண்மைக்கு புறம்பான விஷயங்கள் வேகமாக பரவுகின்றன. எனவே அந்தப் பதிவுகளை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு, டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் இது கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று டுவிட்டர் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த மத்திய அரசு, ‘அமெரிக்காவில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறைகளுக்கு பின்னர் டுவிட்டர் எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறாக உள்ளது இந்தியாவில் அதே நிறுவனம் மேற்கொள்ளும் அணுகுமுறை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டு, நாட்டில் பிரிவினையை உண்டாக்க முயற்சிக்கும் பதிவுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக பட்டியலிட்ட பிறகும், டுவிட்டர் நிறுவனம் இவ்வாறு நடந்து கொள்வது அர்த்தமற்றது’ என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று காலை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விவசாயிகளின் போராட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான பதிவுகளை வெளியிட்டுள்ள 1,178 பேரின் டுவிட்டர் கணக்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். இந்த உத்தரவுக்கு பின்னரும் ட்வீட்டர் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் வரவில்லை. இந்தியாவில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் இந்திய அரசின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தவறினால் சட்டப்படியான கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக டுவிட்டரை தடை செய்வதுடன், அந்நிறுவனத்தின் இந்திய உயரதிகாரிகளை கைது செய்யவும் நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சில
  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை



  • அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி



  • போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலை



  • டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு



  • மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி



  • ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்



  • உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]