இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

உலக அளவில் கெத்து... சேப்பாக்கத்தில் 'ஆதிக்கம்' காட்டினால் அஸ்வினை அசைக்க முடியாது

2/2/2025 5:09:02 PM
டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் 2 ஆசிரியைகள் தலைமறைவு: தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர் மருத்துவ பரிசோதனைகளுக்காக நடிகர் ரஜினி அமெரிக்கா புறப்பட்டார்

சென்னை: சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய முரளிதரன், வார்னே, கும்ப்ளே போன்றவர்களுக்கு இணையாக அஸ்வின் உருவெடுத்து இருக்கிறார். இவர்களையும் கூட அஸ்வின் சர்வதேச அளவில் மிஞ்சுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆடிய நிலையிலும் மூன்றிலும் அஸ்வின் பவுலிங்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

டெஸ்ட் அணியில் தனது அனுபவம் என்ன என்பதை அவர் ஆஸ்திரேலிய மண்ணில் நிரூபித்தார். சொந்த மண்ணில் அனுபவ ஸ்பின் பவுலர் நாதன் லயன் போன்ற வீரர்களே திணறியபோது அஸ்வின் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் தான்தான் கெத்து என்பதை அஸ்வின் நிரூபித்துவிட்டார். தற்போது அஸ்வினுக்கு இன்னுமொரு கூடுதல் வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் தன்னுடைய முழு திறமையை வெளிக்காட்ட முடியும்.

காரணம் இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதனால் அஸ்வின், தான் ஸ்பின் பவுலிங் பழகிய மைதானத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியும். எளிதாக விக்கெட்டுகளை எடுக்க முடியும். அஸ்வினுக்கு பயந்துதான் இங்கிலாந்து அணியே இந்தியா வந்துள்ளது.

சென்னை ஸ்பின் மைதானம் என்பதால் அஸ்வினை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற அச்சம் இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இதனால் கண்டிப்பாக இந்த தொடரில் அஸ்வின் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார். இங்கிலாந்து அணியில் அஸ்வின் அளவிற்கு சிறந்த ஸ்பின் பவுலர்கள் இல்லை. இதனால் அஸ்வின்தான் இரண்டு அணிக்கும் இடையிலான வித்தியாசமாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் முத்திரை பதிப்பதன் மூலம் அஸ்வின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறலாம். மேலும்  தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் அஸ்வின் இதன் மூலம் மீண்டும் டி 20, ஒருநாள் போட்டிகளுக்கும் திரும்ப முடியும். முக்கியமாக குல்தீப் யாதவின் பார்ம் அவுட்டிற்கு இடையில் அஸ்வின் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும். இந்த தொடரில் மட்டும் அஸ்வின் காயமின்றி நன்றாக ஆடினால் அவரை அவ்வளவு எளிதாக இனி புறக்கணித்துவிட முடியாது.

மேலும் சில
  • இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்: உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு?



  • டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் நாளை துவக்கம்: இந்தியா-நியூசிலாந்து பலப்பரீட்சை: பட்டம் வெல்லப்போவது யார்?



  • இங்கிலாந்து புறப்படும் முன் கொரோனா பாதித்தால் அணியில் இடம் இல்லை: பிசிசிஐ அதிரடி



  • பஞ்சாப் அணிக்கு எதிராக அபார வெற்றி: எதிரணியினர் எங்கள் பந்துவீச்சாளர்களை சமாளிப்பது கடினம்..! டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் சொல்கிறார்



  • ருதுராஜ்-டூபிளெசிஸ் பார்ட்னர்ஷிப் புத்திசாலித்தனமாக இருந்தது: சென்னை கேப்டன் டோனி பேட்டி..!



  • மும்பைக்கு எதிராக அபார வெற்றி: கெய்ல் போன்ற வீரர் கிடைத்திருப்பது பெருமை..! பஞ்சாப் கேப்டன் ராகுல் நெகிழ்ச்சி



  • இங்கிலாந்துக்கு எதிராக இன்று முதல் டி.20 போட்டி: ரோகித்சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆடுவார்..! கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி



  • இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]