இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்

1/26/2021 5:06:53 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

புதுடெல்லி: டெல்லியின் எல்லையில் விவசாய சட்டங்களை வாபஸ் பெறக்கோரி போராட்டம் மற்றும் கொரோனா வழிகாட்டலுக்கு மத்தியில் குடியரசு தின  விழா தலைநகர் டெல்லியில் நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் குறைந்தளவு பார்வையாளர்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகளின்றி நாடு முழுவதும் இன்று 72வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநில, யூனியன் பிரதேச ஆளுநர்கள் அந்தந்த மாநில தலைநகரில் தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

தலைநகர் டெல்லியின் ராஜ பாதையில் இருந்து குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் 8 கி.மீ. தூரம் வரை அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக துப்பாக்கிகளால் துல்லியமாக சுடும் வீரர்கள் உயரமான கட்டிடங்களில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க டெல்லி மற்றும் அதனைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அணிவகுப்பு செல்லும் தூரமும் குறைக்கப்பட்டது.

வழக்கமாக செங்கோட்டை வரை செல்லும் அணிவகுப்பானது, இம்முறை விஜய் சவுக்கிலிருந்து தேசிய அரங்கத்துடன் நிறைவடைந்தது. செங்கோட்டையில் மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்றது. முதன்முறையாக, ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றன. மொத்தம் 32 அணிவகுப்பு ஊர்திகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 17, பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து 6, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப் படைகளில் இருந்து 9 என்ற அடிப்படையில் அணிவகுப்புகள் நடந்தன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. முன்னதாக காைல 9.40 மணிக்கு தேசிய போர் நினைவிடத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைவர்கள் உள்ளிட்டோர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 10.03 மணிக்கு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். அதன்பின் நடந்த பல்வேறு அணிவகுப்பு மரியாதை மற்றும் ஊர்திகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழா நடந்து கொண்டிருந்த அதேவேளையில், டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டிராக்டர் பேரணிக்கான ஏற்பாடுகளும் நடந்தன. டெல்லியின் எல்லை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். குடியரசு தின விழா முடிந்த பின்னர், மாபெரும் டிராக்டர் பேரணி தொடங்கியது. குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.

மேலும் சில
  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



  • 3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை: 19 நாளில் 13 முறை விலை உயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]