இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா

1/25/2021 5:01:48 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

மும்பை: பாஜகவின் எதிரியாக மாறி மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த சிவசேனா கட்சியின் பத்திரிகையில் வெளியான கட்டுரையில், ‘மேற்குவங்க அரசியல் நாளுக்கு நாள் மேலும் சுவாரஸ்யமடைந்து வருகிறது. ஆனால் இந்த பரபரப்பு ஒரு ரத்தக்களரி திருப்புமுனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்துத்துவா பிரச்னைகளை பாஜக தூண்டுகிறது. கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவில் ஒரு தீப்பொறி பரவவிடப்பட்டது. அரசு விழாவில் பிரதமர் முன்னிலையில் ​​முதல்வர் மம்தா பேச எழுந்த போது, ‘ஜெய் ராம்’ என்று கோஷமிட்டார். அப்போது கோபமடைந்த மம்தா பானர்ஜி, ‘அது அவமானம்’ என்று கூறி பேச மறுத்துவிட்டார்.

இந்த விசயத்தில் மம்தா பானர்ஜியின் ‘வீக் பாயிண்ட்’ மேற்குவங்க பாஜகவால் அடையாளம் காணப்பட்டுள்ளது. தேர்தல் வரை இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கங்களால் மம்தாவை எரிச்சலடையச் செய்யக்கூடாது என்பது எங்கள் கருத்து. மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க வைக்க வேண்டும் என்பது பாஜகவின் தேசிய தலைமையின் முடிவு. அதன்படிதான், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மேற்குவங்கத்தில் பிரபலமடைந்துள்ளனர். தாகூரைப் போல தாடி வைத்துள்ள பிரதமர் மோடியும், மேற்குவங்கத்திற்கு வந்து மண்ணின் மைந்தர்கள் மத்தியில் பேசிவிட்டு சென்றுள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகம் என்பது அமெரிக்க முன்னாள் அதிபர் ‘டிரம்ப் மனநிலை’ போன்றது அல்ல. மேற்குவங்கத்தில் பாஜக தனது மதப் பிரிவைத் தொடங்கியுள்ளது. இதற்கு மம்தா பானர்ஜியும் ஓரளவிற்கு பொறுப்பு. மம்தா பானர்ஜி முதல்வாராக இருந்த போதும், அவரது குரல் மக்களை சென்றடையவில்லை. தற்போது பாஜக தலைவர்கள் மேற்குவங்காளத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் ‘மொழி’யைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேற்குவங்கத்தின் அதிநவீன ஆளுநர் ஜெகதீஷ் தங்கரை என்ெவன்று சொல்ல... மகாராஷ்டிரா ராஜ் பவனில் என்ன நடக்கிறதோ அதேதான் கொல்கத்தா ராஜ் பவனிலும் நடந்து வருகிறது.

மத்திய உள்துறை துறைக்கு அறிக்கையை அனுப்புவதே ஆளுநரின் பணி. ஆனால், அவர் மேற்குவங்கத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு வளர்ந்து வருவதாக கூறுகிறார். இதுபோன்ற செய்திகளை அவர் எங்கிருந்து சேகரித்தார்? மேற்குவங்கத்தில் ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராஜா ராம்மோகன் ராய் போன்ற தலைசிறந்த மனிதர்கள் பிறந்தவர்கள். சுதந்திர போராட்டத்தில், மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னணியில் இருந்தன. இன்றும், மூன்று மாநிலங்களும் சுய மரியாதைக்காக போராடுகின்றன.

ஆனால் இந்த மூன்று மாநிலங்களுக்கும் எதிராக மத்திய அரசு நிற்கிறது. டெல்லி எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் மிதிக்கப்படுகிறார்கள். மேற்குவங்கம், மகாராஷ்டிராவில் அரசியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



  • 3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை: 19 நாளில் 13 முறை விலை உயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]