இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா தீவிர அரசியலில் குதிக்க முடிவு

1/20/2021 5:14:27 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

சென்னை: வரும் 27ம்தேதி சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா, தீவிர அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தனது ஆதரவாளர்கள் பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை என்று முதல்வர் அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தாலும், சசிகலா வருகைக்கு பின் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா,  சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்கள். அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார்கள்.
சசிகலா  மட்டும் வரும் 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக கர்நாடக சிறை துறை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 27ம்தேதி காலை 10 மணிக்கு சசிகலா வெளியில் வருகிறார்.  அவருக்கு தமிழக எல்லையான ஓசூரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அவரது  ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஓசூர் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் சசிகலா தங்குவதற்கான வீடு ஏற்பாடாகியுள்ளது. ஆனால் அவர்  எந்த வீட்டில் தங்க உள்ளார் என்பது குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவில்லை. சிறையில் இருந்து வெளியில் வரும் சசிகலா தீவிர அரசியலில் குதிக்க முடிவெடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக சிறையில் இருக்கும் போதே, தனது ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் வெளியில் வந்த உடன் ஆதரவாளர்களை நேரில் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சசிகலா போட்டியிட முடியாது. தண்டனை அனுபவித்து வந்திருப்பதால், சட்டப்படி இன்னும் 4 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும், டிடிவி.தினகரன் மூலம் பாஜ கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, தீவிர அரசியலில் குதிக்க சசிகலா முடிவெடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக தான் ஆதரவாளர்கள் பட்டியலை தயாரித்து அவர்களை அழைத்து சசிகலா பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பது, அதிமுக தன்னை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டதாக பாஜ தலைமையிடம் கூறியுள்ளதால், அவர்களுக்கு என்ன மாதிரியான பதிலடி கொடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆதரவாளர்களுடன் சசிகலா விவாதிப்பார் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்தே, இந்த சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் பங்கு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். அவரது அரசியல் அதிமுகவுக்கு என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]