இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை

1/17/2021 5:37:05 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

புதுடெல்லி: வங்கிகளில் கடன் வாங்கிய மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றின. இந்த வழக்குகளை மூடி மறைக்கவும், விசாரணையை தாமதப்படுத்தவும் சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் நான்கு சிபிஐ அதிகாரிகள் சிக்கியுள்ளனர். சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி, குர்கான், மீரட், நொய்டா, கான்பூர், காசியாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் சோதனை மேற்கொண்டனர். லஞ்சப்புகாரில் சிக்கிய சிபிஐ அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் பரிசோதனை நடைபெற்றது.

மேலும், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திலேய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காசியாபாத் சிபிஐயில் டிஎஸ்பியாக பணிபுரியும் ஆர்.கே. ரிஷி, மற்றொரு டிஎஸ்பியாக சங்க்வான், இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர்குமார் சிங், ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி கூறுகையில், ‘சிபிஐ அதிகாரிகள் நால்வர் மீதும் அதிகார துஷ்பிரயோகம் செய்தல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்ள லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது. இதில் சிபிஐ இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர்குமார் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி ரேங்க் அதிகாரிகள் ஆர்.கே.ரிஷி மற்றும் சங்க்வான் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிபிஐ தனது அமைப்பின் அதிகாரிகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. நான்கு அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆய்வாளர் தனது இரண்டு மூத்த டிஎஸ்பிக்கள் ஆகியோர் 2 நிறுவனங்களிடம் இருந்து குறைந்தது ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றனர். இதற்கு உடந்தையாக ஸ்டெனோகிராபர் சமீர் குமார் சிங் இருந்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]