இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி

1/15/2021 5:46:30 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

ஸ்ரீவைகுண்டம்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பொங்கலையொட்டி காலை முதல் இரவு 7 மணி வரை சற்று வெறித்திருந்த மழை மீண்டும் விடிய விடிய பெய்தது. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் முறையே 18.5 செமீயும் (185 மிமீ), 16.5 செ.மீயும் (165 மிமீ) மழை பெய்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 81 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றது. நேற்றுமுன்தினமே தாமிரபரணி ஆற்றில் 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் சென்றதால் முத்தாலங்குறிச்சி, கருங்குளம், கொங்கராயகுறிச்சி, சிவராமங்கலம், ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு ஆகிய ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனையடுத்து,  வாழை மற்றும் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. புளியங்குளத்திலும், கருங்குளத்திலும் மெயின்ரோடு தண்ணீரில் மூழ்கியதால் நெல்லை- திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அருகே புளியங்குளத்தில் கட்டப்பட்டிருந்த முதுமக்கள் தாழி மையத்திற்குள் சமீபத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் இந்த மையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இந்த மையத்தை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டும் அளவுக்கு வெள்ளம் வந்துள்ளது.

தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர், தண்ணீர் ததும்பி செல்லும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணை, கருங்குளம் பகுதி, சிவராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

தூர் வார ஒதுக்கிய பணம் எங்கே?
கருங்குளம் மக்கள் நலக்குழு செயலாளர் உடையார் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் 425 குளங்கள் தூர் வாரியதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மருதூர் மேலக்கால் பாசன வாய்க்கால் குளங்கள் தூர் வார ரூ.57 லட்சத்து 12 ஆயிரத்து 440ம், முத்தாலங்குறிச்சி முக்கவர் வாய்க்கால் தூர் வார ரூ.2 கோடியே 93 லட்சத்து 62 ஆயிரத்து 838ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மருதூர் மேலக்காலில் தூதுகுழிகுளம், கிருஷ்ணன்குளம்,பெட்டைகுளம், பெரியகுளம் ஆகிய குளங்கள் தூர் வாரப்படவில்லை. குளங்களை முறையாக தூர் வாரியிருந்தால் கடலில் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாவதை தவிர்த்திருக்கலாம்’’ என்றார்.

மேலும் சில
  • திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து



  • திருச்சியில் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்: 100 அடி உயர கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார்



  • மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு



  • திருச்சியில் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்: 100 அடி உயர கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார்



  • தமிழகத்தில் 2வது கட்ட பிரசாரம் நாகர்கோவிலில் வீடு வீடாக அமித்ஷா வாக்கு சேகரிப்பு: சுசீந்திரம் கோயிலில் சாமி தரிசனம்



  • கூட்டணியில் இருந்து விலகல்; அதிமுக அரசுக்கு எதிராக 84 தொகுதிகளில் பிரசாரம்: கருணாஸ் பேட்டி



  • காங்கிரஸ் நேர்காணல் முடிந்த பின்னர் திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி



  • கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி



  • 20 தொகுதிகள் ஒதுக்கீடு; அதிமுக தலைவர்கள் மீது பாஜக கடும் அதிருப்தி: நள்ளிரவில் ஒப்பந்தம் வெளியானது ஏன்? பரபரப்பு தகவல்கள்



  • மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் நாளை திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம்; 10 ஆண்டு தொலைநோக்கு திட்டம் வெளியீடு: ‘தமிழக வளர்ச்சிக்கான வழிகாட்டி’ என அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]