இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வரும் 19ம் தேதி முதல் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் திறப்பு: விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

1/13/2021 5:25:09 PM
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

கோபி: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பள்ளி திறந்தாலும், விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார், கோபி அருகேயுள்ள ஏளூரில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மற்றும் கறவை மாடும் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது : தமிழக முதலமைச்சர் நேற்று 10 மற்றும் 12 ம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார். சுகாதார துறை அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி பள்ளிகள் செயல்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களை பாதுகாக்க அனைத்து அறிவுரைகளையும் முதலமைச்சர் கூறி உள்ளார். அதன்படி பள்ளிகள் செயல்படும். இன்றைய சூழ்நிலையில் பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலம். தனியார் பள்ளிகள் கட்டாய கட்டண வசூல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாக கற்கும் போது பெற்றோர்கள் கண்காணிக்கலாம். செல்போன் மூலமாக கற்கும் போது கண்காணிக்க முடியாது.

முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்பு திறக்கப்பட்டுள்ளது. இதற்காக 6029 பள்ளிகள் தயாராக உள்ளது. இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை திறக்கலாம் என்று ஆய்வு செய்து திறக்கப்படும். பேருந்து இலவச பயண அட்டை இல்லை என்றாலும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம். மதிய உணவுடன் ஊட்டச்சத்து வழங்குவது குறித்து அரசுக்கு எந்த யோசனையும் இல்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலும் சில
  • நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு



  • ஆவின் பால் விலை அதிரடி குறைப்பு: புதிய விலை பட்டியல்



  • கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை



  • எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்: பின்னால் இருந்து இயக்கும் சசிகலா



  • உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம்: சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் நியமனம்..!



  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு: வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடல்



  • 4வது முறையாக புதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு



  • கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது



  • கட்சிக்குள் மோதல் எதிரொலி: அரசியலில் இருந்து விலகி இருக்க கமல்ஹாசன் முடிவு?



  • கவர்னர் மாளிகையில் இன்று எளிமையாக நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]