இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மேலடுக்கு சுழற்சி காரணமாக பொங்கலன்று தென்மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

1/12/2025 5:49:35 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக பொங்கல் அன்று தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு: இலங்கை மற்றும் குமரி பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும். கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல் நாளை (புதன்கிழமை) தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். அதேபோல் வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும் (86 டிகிரி), குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை (75.2 டிகிரி) ஒட்டியும் இருக்கும். நாளை(13ம் தேதி) கேரள கடலோர பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

மேலும் சில
  • கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தமிழகம் முழுவதும் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் 25ம்தேதி வரை பெறலாம்



  • தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு குறைக்கப்பட்ட பாடங்கள் எவை?.. தமிழக அரசு அறிவிப்பு



  • முதல்வர் எடப்பாடி இன்று காலை டெல்லி புறப்பட்டார்; அமித்ஷாவுடன் உடன்பாடு ஏற்படுமா?



  • 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு: ஆயத்த பணிகள் தீவிரம்



  • எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் : முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை



  • உலகப்புகழ் ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்தார் அலங்காநல்லூரில் காளைகள் ‘அதகளம்’: அடங்க மறுத்த மாடுகள்; அடக்கி சிலிர்த்த வீரர்கள்



  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்



  • தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி



  • அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]