இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பள்ளிகள் திறப்பு இன்று அறிவிப்பு வெளியாகும்

1/11/2025 5:42:59 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பொதுமக்கள் தெரிவிக்க கருத்து கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட  அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அல்லது நாளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, தற்போது பள்ளிகளை திறப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதையடுத்து, பள்ளிகளை திறக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அந்த கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழகத்திலும் பள்ளிகளை திறந்து 10, பிளஸ்1  மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தலாம்  என்று அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதையடுத்து, கடந்த 6 ம் தேதி முதல் 8ம் தேதி வரை மீண்டும் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கேட்பில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளை திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கேட்பில் பெறப்பட்ட கருத்துகளை 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெற்று, சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்மீ–்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்து முதல்வருக்கு தெரிவிக்க உள்ளனர்.

இதற்கான ஆய்வுக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதையடுத்து பள்ளிகள் திறப்பதா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அல்லது நாளை தனது முடிவுகளை அறிவிப்பார்.

மேலும் சில
  • கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தமிழகம் முழுவதும் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் 25ம்தேதி வரை பெறலாம்



  • தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு குறைக்கப்பட்ட பாடங்கள் எவை?.. தமிழக அரசு அறிவிப்பு



  • முதல்வர் எடப்பாடி இன்று காலை டெல்லி புறப்பட்டார்; அமித்ஷாவுடன் உடன்பாடு ஏற்படுமா?



  • 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு: ஆயத்த பணிகள் தீவிரம்



  • எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் : முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை



  • உலகப்புகழ் ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்தார் அலங்காநல்லூரில் காளைகள் ‘அதகளம்’: அடங்க மறுத்த மாடுகள்; அடக்கி சிலிர்த்த வீரர்கள்



  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்



  • தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி



  • அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]