இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கூட்டணி தர்மத்தை மீறலாமா? சிவசேனா நிர்வாகியை வளைக்கும் சரத்பவார் : டுவிட்டை போட்டுவிட்டு நீக்கியதால் பரபரப்பு

1/9/2025 5:36:14 PM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மும்பை: சிவசேனா கட்சி நிர்வாகியை தனது கட்சியில் சேரவுள்ளதாக டுவிட் செய்த சரத் பவார், பின்னர் அந்த டுவிட்டை நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில்  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாதி) ஆட்சி நடைபெறுகிறது. குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றொரு கட்சிக்குச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், சோலாப்பூரைச் சேர்ந்த முன்னாள் சிவசேனா தலைவர் மகேஷ் கோத்தே மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவர் சிவசேனாவிலிருந்து விலகியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சிவசேனா கட்சியின் சோலாப்பூர் பிரிவும், மகேஷ் கோத்தே கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவித்தது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சோலாப்பூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் மகேஷ் கோத்தே மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று (நேற்று) தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளனர். மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரையும் வரவேற்கிறோம்’ என்று பதிவிட்டிருந்தார். இவரது பதிவால் கூட்டணி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணிக்குள் இருந்து கொண்டே மற்ற கட்சியின் நிர்வாகிகளை தங்கள் கட்சிக்குள் இழுப்பது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து, சரத்பவார் தான் வெளியிட்ட டுவிட்டர் பதிவை அடுத்த சில நிமிடங்களில் நீக்கினார். இச்சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்தாண்டு, அகமதுநகர் மாவட்டத்தின் பார்னரைச் சேர்ந்த ஐந்து சிவசேனா கவுன்சிலர்கள் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தனர். இது ஆளும் கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியது. இருப்பினும், தேசியவாத காங்கிரசில் ேசர்ந்த இந்த கவுன்சிலர்கள் மீண்டும் சிவசேனாவுக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம்



  • உட்கட்சி பூசலால் பாஜ மேலிடம் அழுத்தம்; கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டபடி அறிவித்தார்



  • உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்



  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை



  • வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு



  • நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில் 24 மணி நேரத்தில் 3,998 பேர் பலி?.. ஒன்றிய அரசின் குளறுபடி தகவலால் அதிர்ச்சி



  • இந்தியாவில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு அரியானா சிறுவன் பலி: தேசிய வைராலஜி நிறுவன ஆய்வில் தகவல்



  • நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: மும்பை போலீசார் நள்ளிரவில் அதிரடி



  • ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது: எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை



  • ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]