இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்

12/30/2020 5:20:26 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி ேபாட்டுக் கொண்டார். இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 53,135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இங்கிலாந்தில் 71,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

தலைநகர் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வகை வைரஸ் பரவி வரும்நிலையில், அங்கு நிலைமை மோசமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார். மேலும், கமலா ஹாரிசின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.

அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும், தலைவர்கள் முதற்கட்டமாக தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர். தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும் கடந்த சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு



  • இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை..! அதிகாரிகள் அட்வான்ஸ் குழு நாளை காலை தமிழகம் வருகிறது



  • ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்



  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]