இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி

12/4/2025 5:20:29 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட கங்கனாவை, டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடுமையாக சாடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கங்கனா வெளியிட்ட டுவிட்டில், ‘டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தில் (சிஏஏ) பங்கெடுத்த அதே மூதாட்டிதான் இவர். இவரைத்தான் டைம் பத்திரிகை இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிட்டு பாராட்டியிருந்தது. இப்போது விவசாயிகள் போராட்டத்தில் இருக்கிறார். இவர் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள 100 ரூபாய் கொடுங்கள் போதும்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த டுவிட்டால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட கங்கனா, பின்னர் அதனை நீக்கிவிட்டார். இருந்தும் அவருக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹக்கம் சிங் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வயதான பெண் குறித்து கங்கனா அவதூறு கருத்து பதிவிட்டுள்ளார். ஒரு சில படங்களில் நடத்திவிட்டு, டுவிட்டரில் அசிங்கமான கருத்துகளை பதிவிட்டு வரும் அவர் தன்னை சிங்கம் என்றோ, ஜான்சி ராணியாகக் கருதி உள்ளாரா?

இந்த நாட்டின் உண்மையான சிங்கம் கடின உழைப்பாளிகளான பெண்கள்தான். அவர்கள்தான், நாட்டை வளர்த்து, உணவளித்து, எல்லைகளையும் பாதுகாத்து வருகின்றனர். ‘ஒய்’ பிரிவு பாதுகாப்புடன் செல்வதால் அவர் தன்னை ஒரு சிங்கமாக கருதுகிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு தைரியம் இருந்தால், ஒரு நாள், வயலில் இறங்கி வேலை செய்யுங்கள். ஒரு நாளாவது எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண பெண்ணாக வெளியே வாருங்கள். ஏழை தொழிலாளியைப் போல் நடந்து கொள்ளுங்கள் பார்ப்போம். நாள் முழுக்க வேலை செய்துவிட்டு, உங்கள் வீட்டு வேலைகளை செய்து காட்டுங்கள்’ என்று காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் சில
  • பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி



  • 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கறிக்கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு



  • கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை



  • கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை: மாநில அரசுகளுக்கு கமிஷன் கிடுக்கிபிடி உத்தரவு



  • வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசிய 4 பேர் குழுவிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது: காங். செய்தி தொடர்பாளர் காட்டம்



  • புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தது: இன்று மாலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு



  • பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; ‘அல்வா’ நிகழ்ச்சி, பிரிண்ட் ஆவணம் கிடையாது: மத்திய நிதியமைச்சக வட்டாரம் தகவல்



  • டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு



  • 15ம் தேதி 9ம் கட்ட பேச்சுவார்த்தை வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]