இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

குளிர் சீசன், தீபாவளிக்கு பிந்தைய சூழ்நிலையால் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா; வடமாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்

11/22/2020 6:30:27 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

புதுடெல்லி: குளிர் சீசன் மற்றும் தீபாவளிக்கு பிந்தைய சூழ்நிலையால் வடமாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. அதனால் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்த நிலையில், தொற்று பாதிப்பால் 1.33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தொற்று மீண்டும் வேகம் அடைந்துள்ளது. குளிர் சீசன் மற்றும் தீபாவளிக்கு பிந்தைய சூழ்நிலையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவதுறை அறிக்கைகள் கூறுகின்றன. தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், பெரிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்றிரவு முதல் மத்திய பிரதேசத்தின் இந்தூர், குஜராத்தின் சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் இரவுநேர முழு ஊரடங்கு அமலாகி இருந்தது. இந்தூரில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், குஜராத்தின் இரு நகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தூரில் நேற்று ஒரே நாளில் 546 பேருக்கு புதியதாக நோய் தொற்று ஏற்பட்டது.

குஜராத்தில் நேற்று 1,515 பேருக்கு புதியதாக தொற்று ஏற்பட்டது. ராஜஸ்தானின் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 200லிருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தில் உள்ள சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருமண விழாவில் கலந்துகொள்வோர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர், பஸ், ரயில் மற்றும் விமான பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]