இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தேர்தல் தோல்விகள் குறித்து தொடர்ந்து விமர்சனம்; கபில்சிபல் எங்கள் தலைவரே அல்ல! காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் காட்டம்

11/22/2020 6:29:29 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

புதுடெல்லி: தேர்தல் தோல்விகளால், இன்று எங்க கட்சி தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல், சில மாநிலங்களில் இடைத்தேர்தல்களில் காங்கிரசின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக அந்த கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறினார். இதற்கு அந்த கட்சியை சேர்ந்த அசோக் கெலாட், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்பட சில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கபில் சிபலோ தன்னுடைய கருத்தில் உறுதியாக உள்ளார். அண்மையில் கபில்சிபல் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 18 மாதங்களாக கட்சிக்கு முழு நேர தலைவர் இல்லாதபோது, உங்களால் எப்படி திறமையான எதிர்க்கட்சியாக இருக்க முடியும்?. ஏன் நாம் தோற்றோம் என்று கட்சியில் பேசுவது கூட இல்லை. நான் காந்தி குடும்பத்துக்கு எதிரானவன் அல்ல. கட்சியின் செயல் மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்து பேசும் வரை நான் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன். இன்று, காங்கிரஸ் தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.

அவர்கள் மற்றவர்களிடம் எதிர்க்கொள்ளும் கேள்வி என்னவென்றால், உங்க கட்சிக்கு என்னாச்சு? என்பதுதான். தொண்டர்களின் உணர்வுகளுக்கு என்ன பதில் உள்ளது? எனது உணர்வுகளும் புண்பட்டுள்ளன. நான் யாருக்கும் சவால் விடவில்லை. நாளையே மாற்றங்கள் நிகழந்து விடாது என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் 2014, 2019ல் தோற்றோம். நாம் மக்களிடம் செல்ல வேண்டும், காங்கிரஸ் சித்தாந்தம் என்ன என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கபில்சிபல் கட்சித் தலைமைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘காங்கிரசுக்கு கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முடிந்ததும் முறையாக அறிவிக்கப்படும். கபில் சிபல் குறித்தும், அவர் பேசியது குறித்தும் நாங்கள் கருத்து தெரிவிக்க தேவையில்லை. அவர் எங்கள் தலைவர் அல்ல’ என்றார். கட்சியின் மூத்த தலைவர்களுக்குள் கருத்து ேமாதல்கள் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]