இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

50 கேட்ட அமித்ஷா...!! 34 கொடுத்த எடப்பாடி; அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு இழுபறி: மீண்டும் சென்னை வந்து பேச திட்டம்

11/22/2020 6:25:29 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 50 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தினார். ஆனால் 34 தொகுதி தான் கொடுக்க முடியும் என்று எடப்பாடி அதிரடியாக அறிவித்தார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் அமித்ஷா சென்னை வந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவர் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், \”நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக- பாஜக கூட்டணி, வர உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும்’’ என்று அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, ஓட்டலுக்குச் சென்ற அமித்ஷாவை, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஆகியோர் சந்தித்து பேசினர்.

சந்திப்புக்கு முன்பாக கூட்டணி சீட் பங்கீடு விவகாரம் தொடர்பாக அமித்ஷாவிடம் நான் பேசி கொள்கிறேன். என்னிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன என்று எடப்பாடி, ஓபிஎஸ்சிடம் தெரிவித்தார். அதற்கு ஓ.பி.எஸ். சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினார். அப்போது அமித்ஷா, அதிமுக 117 இடங்களில் போட்டியிடட்டும், பாஜகவுக்கு 117 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கூறினார். பாஜகவுக்கு ஒதுக்கப்படும் 117 இடங்களில் கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜகவே சீட் கொடுக்கும். அவர்களுக்கு சீட் வழங்கும் விவகாரத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றும் அமித்ஷா முதல் திட்டத்தை தெரிவித்தார். இரண்டாம் திட்டமாக பாஜகவுக்கு 50 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூறி பாஜக போட்டியிடும் என்று கண்டறியப்பட்டுள்ள 60 தொகுதிகளுக்கான பட்டியலை அமித்ஷா அளித்தார். இதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை. பாஜகவுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி கூறினார். அதிகமான தொகுதிகளை வழங்கினால் பீகாரில் காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்படும்.

எனவே, அவ்வளவு சீட் தர முடியாது. மேலும் பாஜகவுக்கு தமிழகத்தில் மக்களிடையே எந்த செல்வாக்கும் இல்லை. போட்டியிடவும் ஆட்கள் இல்லை. நாங்கள் கொடுக்கும் சீட்டை வாங்கி கொள்ளுங்கள். பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான செலவு அனைத்தையும் அதிமுக ஏற்றுக்கொள்ளும் என்றும் எடப்பாடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நாங்கள் வைத்துள்ேளாம். எனவே, நாங்கள் கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தினார். இதையடுத்து 34 சீட் வரை தர எடப்பாடி இறங்கி வந்தார். ஆனால், 50 இடங்களை பாஜகவுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்பதில் அமித்ஷா கறாராக இருந்தார். இதற்கு எடப்பாடி  ஒத்துக்கொள்ளவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமித்ஷா,‘‘ஜனவரி மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும்.

டிசம்பர் மாதத்திற்குள் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார். இதற்கு, கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக எடப்பாடி தெரிவித்தார். இதனால் நேற்று இரவு எடப்பாடி-அமித்ஷா சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. சுமார் 45 நிமிடம் நடைபெற்ற சந்திப்பு இழுபறியுடன் முடிவடைந்தது. மீண்டும் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக மீண்டும் அமித்ஷா சென்னை வருவார் என்றும் கூறப்படுகிறது. இதன்பின்னர் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில்,‘‘சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை டெல்லி மேலிடம் பார்த்துக் கொள்ளும். நீங்கள் தேர்தல் பணியை கவனியுங்கள். பூத் கமிட்டியை பலப்படுத்துங்கள். இப்போதே பூத் கமிட்டியை பலப்படுத்தினால் தான் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை ெகாண்டு வர முடியும்” என்று கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • 90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை



  • ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு



  • முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனு: டிச.7ம் தேதி சசிகலா விடுதலை?



  • விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ம் தேதி திமுக போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு



  • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்



  • ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு



  • பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]