இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்; சிபிஎஸ்இ செயலாளர் தகவல்

11/21/2020 5:42:03 PM
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடக்கும் என்று சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 23ம் ேததி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. நடத்தப்படாமல் இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. சில மாநிலங்களில் தொற்று பரவல் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வுகள், பிப்ரவரி, மார்ச் மாதம் வாக்கில் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த தேர்வுகளை ரத்து செய்தல் அல்லது மே மாதம் வாக்கில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ‘புதிய கல்விக்கொள்கை - பள்ளிக்கல்வியின் பிரகாசமான எதிர்காலம்’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கில், சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி பேசுகையில், ‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயமாக நடைபெறும். தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து விரிவான திட்டத்தை வகுத்து வருகிறோம். விரைவில் அதனை அறிவிப்போம்’ என்றார். ஆனால், வழக்கம்போல் நேரடி தேர்வாக பிப்ரவரி - மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்குமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பது பற்றி சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு



  • உங்களால் கொரோனா வேகமாக பரவுது; ‘நெகடிவ்’ சான்று வாங்கிட்டு மேற்குவங்கத்தில் நுழைங்க!: பாஜக தலைவர்களுக்கு மம்தா கிடுக்கி



  • இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு: தினசரி பலி 4 ஆயிரத்தை நெருங்கியது



  • புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பிற்பகல் பதவியேற்பு



  • கொரோனா தடுப்பு மருந்து வீணாகவில்லை: கேரள அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு



  • கொரோனா 2வது அலையால் பொருளாதாரம் பாதிப்பு: சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி நிதியுதவி..! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு



  • மேற்குவங்க அரசியலில் வரலாற்று வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி 3வது முறையாக முதல்வராக பதவியேற்பு: ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்



  • நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல்காந்தி கருத்து



  • 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு



  • இடது முன்னணி 99 இடங்களில் வெற்றி: 2வது முறையாக முதல்வராகிறார் பினராயி விஜயன்..!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]