இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட விவகாரங்களில் சிபிஐ-யை ‘பீடா’ கடையாக மாற்றிய மத்திய பாஜ அரசு: மகாராஷ்டிரா அமைச்சர் பரபரப்பு குற்றசாட்டு

11/20/2020 5:18:36 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

மும்பை: மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட விவகாரங்களில் சிபிஐ-யை ‘பீடா’ கடையாக மத்திய பாஜ அரசு மாற்றியது என்று, மகாராஷ்டிரா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அரசு அதிகாரிகள்  உள்ளிட்ட சில நபர்கள் மீதான வழக்கை சிபிஐ  விசாரித்தது. ஆனால், மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் இந்த வழக்கை சிபிஐ  விசாரிப்பதாக எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது. இம்மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  அவர்கள் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர்,  பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நேற்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கூட்டாட்சித் தத்துவம்  என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும்.  மாநிலத்தின் அதிகார வரம்புக்கு உள்பட்ட விவகாரங்களில் விசாரணை  மேற்கொள்ளும்போது அதற்கான அனுமதியை சிபிஐ பெற வேண்டியது கட்டாயமாகும். டெல்லி  சிறப்பு காவல் அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சிபிஐ செயல்பட்டு வருகிறது. அச்சட்டத்தின் 5வது பிரிவானது டெல்லி உள்பட நாட்டின் எந்தவொரு  பகுதியிலும் சிபிஐ தனது அதிகார வரம்பை நீட்டித்துக் கொள்வதற்கு அனுமதி  வழங்குகிறது. ஆனால், அதே சட்டத்தின் 6வது பிரிவானது சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலைப் பெறாமல் சிபிஐ தனது விசாரணை வரம்பை நீட்டிப்பதற்குத் தடை  விதிக்கிறது’ என்று கூறப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பால், சிபிஐ விசாரணைக்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்பது தெளிவாகி உள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லம் ஷேக் கூறுகையில், ‘மத்திய பாஜக அரசாங்கத்தில், சிபிஐ ஒரு பான் கடையாக (வெற்றிலை, பாக்கு, பான்மசாலா போன்றவற்றை விற்கும் பீடா கடை) மாறிவிட்டது. சிபிஐ அமைப்பானது நாட்டின் எந்த பகுதிக்கும் சென்று, யார் மீதும் வழக்கு பதிவு செய்கிறது. குறிப்பாக பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன், பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்,  சட்டீஸ்கர் ஆகிய மாநில அரசுகள், சிபிஐ-க்கு வழங்கியிருந்த பொதுவான அனுமதியை திரும்பப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]