இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய காங். மாஜி எம்பிக்கு நோட்டீஸ்: ஜி-23 தலைவர்கள் குறித்து கட்சிக்குள் சலசலப்பு

11/20/2020 5:16:18 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

புதுடெல்லி: பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய காங். மாஜி எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஜி - 23 தலைவர்கள் மீது நடவடிக்கை இல்லாததால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கருத்து மோதல்கள் தொடங்கி உள்ளன. தேர்தல் தோல்வியால் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து கட்சித் தலைமையை குறிவைத்து சில தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால், கட்சித் தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே ெபாதுதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறாக பொதுதளங்களில் கட்சி தலைமை குறித்து விமர்சனம் செய்வதை மூத்த தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியிடம், கட்சியின் முன்னாள் எம்பி புர்கான் அன்சாரி கட்சியின் தேர்தல் தோல்வி குறித்தும், ராகுலுக்கு எம்பிஏ படித்த பட்டதாரிகளை விட சிறந்த ஆலோசகர்கள் தேவை என்றும் கூறி இருந்தார். இது, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், புர்கான் அன்சாரிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக  ஜார்க்கண்ட் பொறுப்பான ஆர்.பி.என் சிங், புர்கான் அன்சாரிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘வரும் ஏழு நாட்களுக்குள் கட்சி தலைமை குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்ற கூறப்பட்டுள்ளது.

இதேபோல் சர்ச்சை கருத்துகளை தெரிவித்த மற்ற தலைவர்களுக்கும் நோட்டீஸ்  கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மக்களவையில் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் ஆதிர்  ரஞ்சன் சவுத்ரி அளித்த ஒரு பேட்டியில், ‘ஜி - 23 குழுவின் தலைவர்களில் (23  அதிருப்தி தலைவர்கள்) பெரும்பாலானோர் பீகார் தேர்தல் பிரசாரத்தில் இருந்து  விலகி  இருந்தனர். தோல்வி குறித்து கேள்வி எழுப்பும் தலைவர்கள், ஏன் தேர்தல்  பிரசாரத்திற்கு செல்லவில்லை? அவர்கள் தங்களது  பொறுப்பைச் செய்திருக்க வேண்டும்’ என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, கட்சி தலைமை குறித்து முடிெவடுக்க 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதினர்.

இவ்விவகாரம் கட்சிக்குள் பூதாகரமாக வெடித்த நிலையில், 23 அதிருப்தி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அப்போதைய செயற்குழு கூட்டத்தில் கோரிக்க விடுக்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது புர்கான் அன்சாரிக்கு எதிராக விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘கட்சியின் ஒழுக்க  விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை. புர்கான் அன்சாரிக்கு எதிராக நோட்டீஸ் வழங்கியது போன்று, மற்ற  தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறைகள் தொடங்கியுள்ளதால், சர்ச்சை கருத்துகளை தெரிவித்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள்  மத்திய அமைச்சர் கபில் சிபல், கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் தோல்வி குறித்து கட்சித் தலைமைக்கு எதிராக கூறிய சர்ச்சை கருத்து குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை’ என்றனர்.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]