இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

குழந்தைகளுக்கு கிடைப்பதில் தாமதமாகும் 2024ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

11/20/2020 5:05:06 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்று, சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். ஆனால், குழந்தைகளுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்றார். கொரோனா தடுப்பூசி கண்டறியும் விஷயத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோர் ஒருங்கிணைந்து தடுப்பூசி உருவாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக நடந்த கருத்தரங்கில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி பூனாவாலா பேசியதாவது: கொரோனா தடுப்பூசி முதலில் சுகாதார ஊழியர்களுக்கும், வயதானவர்களுக்கு வழங்கப்படும். மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகு, சாதாரண மக்களுக்கும் கிடைக்கும். அதன்பின் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

கொரோனாவின் தாக்கம் குழந்தைகளிடம் குறைவாக உள்ளது. இது ஒருவகையில் நமக்கு நிம்மதி அளிக்கிறது. தற்போது தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.  இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. தடுப்பூசி வழங்கப்பட்ட நபர்களுக்கு லேசான காய்ச்சல், தலைவலி மற்றும்  உடல் பலவீனம் போன்ற புகார்கள் வந்துள்ளன. அதற்கு பாராசிட்டமால்  உட்கொள்வதன் மூலம் குணமாக்கி கொள்ள முடியும். எனவே தடுப்பூசி பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை.
இருப்பினும், அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும். ஆனால், நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி சென்றடைய இன்னும் நான்கு ஆண்டுகள் (2024) ஆகும்.

தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்வதில் பட்ஜெட், தடுப்பூசிகள், பராமரிப்பு வசதிகள், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி விநியோகம் ஆகிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும், 10 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன்-ஜூலை மாதத்திற்குள், 300-40 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வோம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஃபைசர் மற்றும் மதர்னாவை விட ஐந்து முதல் ஆறு மடங்கு மலிவாக இருக்கும். இது ரூ.500 முதல் ரூ.600க்கு சந்தைகளில் கிடைக்கும். மத்திய அரசு மொத்தமாக வாங்கிக் கொண்டால், ஒரு டோஸுக்கு மூன்று முதல் நான்கு டாலர்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]