இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பயங்கர மோதல்; பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

11/19/2020 5:22:08 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

நகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் செயல் முறியடிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் அமைதியை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் திட்டங்களை நடத்த முயற்சித்து வருகின்றனர். அவற்றை பாதுகாப்பு படையினர், அதிரடியாக செயல்பட்டு முறியடித்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் பஸ்சில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்தப்பட்டனர். ஜம்மு நகரை இணைக்கு ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நஹ்ரோடா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனைச்சாவடி பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை முடக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினர் இருப்பதை பயங்கரவாதிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், பஸ்சில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் பதுங்கி பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்  நேற்று மாலை நடந்த தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசினர். இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தேடுதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடந்த உடனேயே, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய முழு பகுதியும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]