இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெங்களூரு நீதிமன்றத்தில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்; நிதி நிறுவனத்தை அடமானம் வைத்தார் சசிகலா: ஜனவரி 27ம் தேதி விடுதலை?

11/18/2020 5:14:08 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

பெங்களூரு: வருமானவரித்துறை, அமலாக்கத்துறை கெடுபிடியால் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு விதித்த அபராத  தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை அடமானம் வைத்து செலுத்தி உள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991  முதல் 1996ம் ஆண்டு வரை இருந்தபோது, ரூ.66.65 கோடி வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, 2வது  குற்றவாளியாக சசிகலா, 3வது குற்றவாளியாக வி.என்.சுதாகரன், 4வது குற்றவாளியாக இளவரசி சேர்க்கப்பட்டனர். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த விசாரணை முடிந்து 2014 செப்டம்பர் 27ம் தேதி  நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் குற்றவாளியாக உறுதி செய்ததுடன் நான்கு பேருக்கும் தலா நான்காண்டுகள் சிறை தண்டனையும் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து  குற்றவாளிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளிகள்  இல்லை என கூறி நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதை எதிர்த்து கர்நாடக மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கிய தீர்ப்பில் நான்கு பேரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி  செய்து உத்தரவிட்டது. அதை தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி வழக்கில் 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியான சுதாகரன், 4வது குற்றவாளியான இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள குற்றவாளிகளின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது.

இதனிடையில் சசிகலா விடுதலை தொடர்பாக ஆர்டிஐ சட்டத்தில் சமூக ஆர்வலர் விண்ணப்பித்திருந்த கேள்விக்கு பதிலளித்திருந்த சிறை கண்காணிப்பாளர் 2021 ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். இதனிடையே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மூன்று பேரும் நீதிமன்றம் விதித்திருந்த அபராத தொகையை செலுத்தாமல் இருந்தனர். அதில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 லட்சம் அபராத தொகைக்கான வங்கி வரையோலை (டிடியை )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் நேற்று மாலை வக்கீல் சி.முத்துகுமார் செலுத்தினார். அவருடன் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் உடனிருந்தார். சசிகலா தரப்பில் செலுத்திய அபராத தொகைக்கான வரையோலையை நீதிபதி பெற்று கொண்டார். இவ்வார இறுதி அல்லது அடுத்த வாரம் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை செலுத்தப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், சசிகலா ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்தியது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தொடர் சொத்துக்கள் முடக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு சசிகலாவின் சுமார் ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்தும், கடந்த மாதம் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 6ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியொருக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. இதில், கொடநாடு எஸ்டேட் பழைய பங்களாவும் அடக்கம். சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அடுத்தடுத்து முடக்கியதால் அவர்கள் செய்வதறியாமல் விழிபிதுங்கி நின்றனர். மேலும், முடக்கப்பட்ட சொத்துக்களுக்கான வருமானம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளையும் கேட்டனர். இதனால், சசிகலா தரப்பினர் தற்போது ரூ.10 கோடி அபராதத்தை கையில் இருந்து கட்டினால் மேலும் சிக்கல் ஏற்பட்டு விடும் என கருதினர். வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் பிடியில் இருந்து தப்பிக்க சசிகலா தனது பெயரில் சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை அடமானம் வைத்து அபராத தொகையை கட்டி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரது வக்கீல்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]