இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனாவால் சபரிமலையில் கடும் கட்டுப்பாடு; பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு தொற்று

11/17/2020 6:22:32 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கோயில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று முதல் (16ம் தேதி) மண்டல கால பூஜை தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பேரும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே நவம்பர் 1ம் தேதி தொடங்கிய ஆன்-லைன் முன்பதிவு 2 நாட்களில் முடிந்தது.
இதில் பதிவுசெய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி உண்டு. இவர்கள் தரிசனத்துக்கு செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இதற்காக சபரிமலை செல்லும் வழியில் பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்கும்போது 2 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும்.

பம்பையில் குளிக்க அனுமதி இல்லை. அதன் அருகே குளிப்பதற்காக ஷவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல நெய்யபிஷேகம் செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பம்பை, சன்னிதானத்தில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் 41 நாள் தொடரும் மண்டல கால பூஜைகள், டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் பிரசித்திபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பூஜை நடைபெறும் நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதியில்லை. காலை 5 மணிக்கு நடைதிறந்த பிறகு நிர்மால்யம், கணபதிஹோமம் முடிய 45 நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு 5.45 மணிக்கு ேமல் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவர். பின்னர் 7 முதல் 9 மணிவரை உஷபூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.

அதுபோல உச்சிகால பூஜைக்கு பின்னர் நண்பகல் 12 மணியளவில் களபாபிஷேகம், மீண்டும் மாலையில் 6 முதல் 7 மணிவரை புஷ்பாபிஷேகம் நடைபெறும். இந்த நேரங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. வழக்கமாக மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் படிபூஜை நடத்தப்படாது. இந்த ஆண்டு பக்தர்கள் அதிகம் வராததால் படிபூஜை நடத்தப்படுகிறது. ஆனால் இரவு 8 மணிக்குமேல் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் சன்னிதானத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அதேபோல 7 மணிக்கு மேல் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கூட்டம் இல்லாததால் ேகாயில் வளாகத்தில் உள்ள மேல்பாலம் வழியாக பக்தர்கள் செல்ல தேவையில்ைல. கொடி மரத்தின் வலது பகுதி வழியாக சென்று நேரடியாக தரிசனம் செய்யலாம்.

2 பேருக்கு ெகாரோனா

சபரிமலைக்கு நேற்று தமிழகத்தில் இருந்து வந்த 2 பக்தர்களுக்கு நிலக்கல்லில் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. உடனே அவர்கள் வந்த வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்ெபக்டர் ஒருவருக்கும் ெகாரோனா உறுதி ெசய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்ைசக்காக அனுப்பி ைவக்கப்பட்டார்.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]