இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பு விழா

11/8/2025 6:04:34 PM
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு அரசியலில் இருந்து சசிகலா விலகல் ஏன்?: பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகும் தகுதியை பெற்றுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரீசுக்கும் இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அடுத்தாண்டு ஜனவரியில் ஜோ பிடனும், கமலா ஹாரிசும் பதவியேற்க உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நிறைவடைந்து கடந்த 4 நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சில மாகாணங்களில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் (70) தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். மொத்த மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் எண்ணிக்கையான 538ல் குறைந்தபட்சம் 270 பேரின் வாக்குகளைப் பெற்றாலே அதிபர் தேர்தலில் வெற்றி என்ற நிலை இருந்தது. 

நேற்றைய கணிப்பின்படி, ஜோ பிடன் 290 மக்கள் பிரதிநிதி வாக்காளர்களின் வாக்குகளையும், அதிபர் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் வெற்றி உறுதியானதால், அவர் அமெரிக்காவின் 46வது அதிபராக வரும் 2021 ஜனவரி மாதம் பதவியேற்பார். ஜோ பிடன் வெற்றியுடன், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ்  (56) துணை அதிபராகப் பதவியேற்பார். அமெரிக்காவின் முதல் பெண் துணை  அதிபர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அதிபர் என்ற பெருமையை கமலா  ஹாரிஸ் பெறுகிறார். ஜனநாயகக் கட்சியின் வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில், ஜோ பிடனும், கமலா ஹாரிசும் அமெரிக்க மக்களின் பெரும் ஆரவாரங்களுக்கு இடையே இந்திய நேரப்படி இன்று காலை உரையாற்றினர். 

முதலில் உரையாற்றிய துணை அதிபர் கமலா  ஹாரிஸ், ஜோ பிடனுக்கு புகழாரம் சூட்டி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஜோ பிடன் பேசுகையில், ‘அமெரிக்கர்கள்  தங்களது வாக்குகள் மூலம் தெளிவான முடிவை அளித்துள்ளனர். நான் அதிபராக  தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அமெரிக்கர்களிடம் புதிய நம்பிக்கை  பிறந்துள்ளது. அனைத்து தரப்பு மக்கள் நலனுக்காகவும் நான் பாடுபடுவேன். அமெரிக்காவின்  முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். துணை  அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுவார். இவர், தெற்காசியாவில்  இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் உயர் பதவியை அடைந்துள்ளார். எனது குடும்பத்தின் அன்பு, ஆதரவு இல்லாமல் இந்த நிலைக்கு  வந்திருக்கமுடியாது. கொரோனா தொற்று காலத்தில் பெருந்திரளாக வாக்களித்த  மக்களுக்கு நன்றி. கருப்பின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து  செல்வோம். 
டிரம்ப்புக்கு வாக்களித்தவர்கள் எனக்கு எதிரிகள் அல்ல. அவர்களும்  அமெரிக்கர்கள்தான். 

அவர்கள் நலனுக்கும் பாடுபடுவேன். ஒரு அதிபராக ‘ப்ளூ ஸ்டேட்ஸ், ரெட் ஸ்டேட்ஸ்’ என்று பார்க்காமல், ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப்  அமெரிக்கா’ என்றுதான் பார்ப்பேன். கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கும் வரை நமது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறோம். சர்வதேச  அளவில் அமெரிக்காவின் நற்பெயரை உயர்த்துவோம். உலக நாடுகளில் அமைதி நிலவ  பாடுபடுவேன். அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கும் என்பதை உலகம் உன்னிப்பாக  கவனித்து வருகிறது’ என்று உரையாற்றினார். இதற்கிடையே, அமெரிக்க அதிபராகும் தகுதியை பெற்றுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரிசுக்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத் ேகாவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல், உலக தலைவர்களும் ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]