இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?

11/8/2025 6:01:51 PM
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ள நிலையில் அந்த அணியுடன் மோதப்போவது யார் என்பதை முடிவு செய்யும் குவாலிபயர் 2 போட்டி இன்று நடக்கிறது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி லீக் சுற்றில் கடைசி 3 போட்டிகளில் வலுவான  டெல்லி, பெங்களூரு, மும்பையை வீழ்த்தி 7 வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருரை சாய்த்து தொடர்ச்சியாக 4 வெற்றியை ருசித்த உற்சாகத்தில் இன்று களம் காண்கிறது. வார்னர் 4 அரைசதத்துடன் 546, மனிஷ்பாண்டே 404, வில்லியம்சன் 250 ரன் எடுத்துள்ளனர். பேட்டிங்கை விட பந்துவீச்சு தான் சிறப்பாக உள்ளது. ரஷித்கான் 19, நடராஜன் 16, சந்தீப் சர்மா 13, ஜேசன் ஹோல்டர் 13 விக்கெட் எடுத்துள்ளனர். காயம் காரணமாக சகா மற்றும் விஜய் சங்கர் இன்னும் ஆடவாய்ப்பில்லை. வெற்றி பார்முடன் பைனலுக்குள் நுழையும் முனைப்பில் ஐதராபாத் களம் காண்கிறது.

மறுபுறம் லீக் சுற்றில் 8 வெற்றிகளுடன் 2வது இடத்தை பெற்ற டெல்லி, குவாலிபயர் 1 போட்டிகளில் 57 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் வீழ்ந்தது. தொடரின் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்து வந்த டெல்லி, கடைசி 6 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்துள்ளது. பிரித்வி ஷா தொடர்ந்து தடுமாறி வருகிறார். தவான் 2 சதத்துடன் 525, ஸ்ரேயாஸ் அய்யர் 433, ஸ்டோனிஸ் 314, ரிஷப் பன்ட் 285 ரன்கள் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் ரபாடா 25, நார்ட்ஜே 20, அஸ்வின் 13 விக்கெட் எடுத்துள்ளனர். 

ஆனால் கடந்த போட்டியில் அஸ்வின் தவிர மற்ற அனைவரும் ரன்களை வாரி இறைத்தனர். இதனால் இன்று தவறுகளை திருத்திக்கொண்டு முதன்முறையாக பைனலுக்குள் நுழையும் முனைப்புடன் ஆடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அபுதாபியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் 2வது பேட்டிங் செய்வது எளிது. இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும். இங்கு கடைசியாக நடந்த 6 ஆட்டங்களிலும் 2வது பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். அணிகள் விபரம் ஐதராபாத்: வார்னர் (கேப்டன்), கோஸ்வாமி, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பிரியம் கார்க், ஜாசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷித்கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன். டெல்லி: ஷிகர் தவான், ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஹெட்மயர், ரிஷப் பண்ட்,  ஸ்டோனிஸ், பிரித்வி ஷா, அக்‌சர் பட்டேல், அஸ்வின், ரபாடா, நார்ட்ஜே.

மேலும் சில
  • பஞ்சாப் அணிக்கு எதிராக அபார வெற்றி: எதிரணியினர் எங்கள் பந்துவீச்சாளர்களை சமாளிப்பது கடினம்..! டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் சொல்கிறார்



  • ருதுராஜ்-டூபிளெசிஸ் பார்ட்னர்ஷிப் புத்திசாலித்தனமாக இருந்தது: சென்னை கேப்டன் டோனி பேட்டி..!



  • மும்பைக்கு எதிராக அபார வெற்றி: கெய்ல் போன்ற வீரர் கிடைத்திருப்பது பெருமை..! பஞ்சாப் கேப்டன் ராகுல் நெகிழ்ச்சி



  • இங்கிலாந்துக்கு எதிராக இன்று முதல் டி.20 போட்டி: ரோகித்சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆடுவார்..! கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி



  • உலக அளவில் கெத்து... சேப்பாக்கத்தில் 'ஆதிக்கம்' காட்டினால் அஸ்வினை அசைக்க முடியாது



  • இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



  • அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை



  • ஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]