இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பள்ளி, தியேட்டர் திறப்பு தொடர்பாக 28ம் தேதி கலெக்டர்கள், மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை

10/24/2020 5:26:57 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28ம் தேதி  கலெக்டர்கள், சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.  நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த  மார்ச் 24ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்கள் வசதிக்காக  பல்வேறு தளர்வுகள் அடிப்படையில், கடைகள், பொது போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மால்கள், கோயில்கள்  திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஜூன் முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் தியேட்டர்கள், நீச்சல் குளங்களும்  திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால், தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதம்  இறுதியிலும், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்கள்  மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய தளர்வுகளை அறிவித்து வருகிறார். அதன்படி வருகிற 28ம் தேதி (புதன்) அனைத்து  மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, நவம்பர் 1ம்  தேதியில் இருந்து தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்க உள்ளதாகவும், அப்படி திறந்தால், 50 சதவீதம் மக்கள் அமரும் வகையில் மத்திய அரசு  தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க உத்தரவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

காரணம், நவம்பரில் தீபாவளி பண்டிகை வருகிறது. அப்போது நிறைய புது படங்கள் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தியேட்டர்களை திறக்க  அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோன்று பல மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தனியார் பள்ளிகள்,  ஆன்லைன் மூலம் கடந்த 5 மாதங்களாக வகுப்புகளை நடத்தி வருகிறது. அதேநேரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை  வகுப்புகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக அரசு தேர்வு எழுதும்  10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் மார்ச், ஏப்ரல் மாத தேர்வுக்கு தயாராக வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலையில் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது. ஆந்திராவில் நவம்பர் மாதம் முதல் திறக்கப்பட உள்ளது. அதனால் தமிழகத்திலும் வருகிற நவம்பரில் பள்ளிகளை திறப்பது குறித்து முக்கிய  முடிவு எடுத்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி பள்ளிகள் திறந்தாலும், ஒரு சில மாதங்கள் சுழற்சி முறையிலேயே வகுப்புகள் நடத்த  அனுமதிக்க வாய்ப்புள்ளது.

மேலும் சில
  • 90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை



  • ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு



  • முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனு: டிச.7ம் தேதி சசிகலா விடுதலை?



  • விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ம் தேதி திமுக போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு



  • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்



  • ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு



  • பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]