இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

10/22/2020 4:55:18 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

பாட்னா: பீகார் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி துவங்கி, 3 கட்டங்களாக நவ.7 வரை நடைபெற உள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக நாளை பிரதமர் நரேந்திர மோடி, பாகல்பூரில் முதல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். முன்னதாக பாஜவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை, பாட்னாவில் வெளியிட்டார். 

பாஜவின் இந்த தேர்தல் அறிக்கையின் தாரக மந்திரமாக ‘தன்னிறைவு பெற்ற பீகார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஒரு லட்சியம், கிராமங்கள், நகரங்கள், தொழில் நிறுவனங்கள் கல்வி மற்றும் விவசாயம் ஆகிய 5 துறைகளுக்கான நிச்சயம் நிறைவேற்றப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 11 உறுதிகள் இடம் பெற்றுள்ளன. ஜிடிபி, மின் உற்பத்தி மற்றும் தரமான சாலைகள் உள்ளிட்ட 11 அம்ச வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் பேருக்கு வேலை என்றும் பாஜ அறிவித்துள்ளது. 10 லட்சம் பேருக்கு வேலை என்ற ராஷ்டிரிய ஜனதா தள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் பிரசாரத்தை, ஒருபுறம் கடுமையாக விமர்சித்து வரும் பாஜ, தற்போது 19 லட்சம் பேருக்கு வேலை என்று அறிவித்துள்ளது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் பீகாரில் அமைய உள்ள ஐடி நிறுவனங்கள் மூலம் மேலும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பாஜ அறிவித்துள்ளது.
கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் இது முதலாவது அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது.

சரியான அரசியல் தெளிவு கொண்ட,  ஒருங்கிணைந்த உணர்வுப்பூர்மான மக்களை கொண்டது பீகார் மாநிலம். நிறைவேற்ற முடிந்த  வாக்குறுதிகள் எவை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. எங்களுடைய இந்த தேர்தல் அறிக்கை குறித்து, யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். நாங்கள் கூறியவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையுடன், பதிலளிக்க தயாராக உள்ளோம்.

மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள நாங்கள் பீகார் மக்களுக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். 10 லட்சம் மகளிர் குழுக்கள் மூலம் மாநிலத்தில் 1.20 கோடி பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி உள்ளோம். மகளிர் குழுக்களுக்கு மைக்ரோ நிதி நிறுவனங்கள் மூலம் ஒரு கோடி பெண்களை, சுயமாக வருமானம் ஈட்டச் செய்வோம் என இப்பொழுதும் உறுதி கூறுகிறோம்.

பள்ளிகள் துவங்கி உயர் கல்வி நிறுவனங்கள் வரை 3 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்துவோம். இதன் மூலம் மாநிலம் முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்விகளில் அனைத்து பாடங்களும் இந்தி மொழியிலும் கற்பிக்க, தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]