இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மருத்துவக் கல்வியைப் போன்று இன்ஜி. படிப்புக்கு நுழைவு தேர்வு தேவையில்லை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

10/22/2020 4:49:24 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை: மருத்துவக் கல்வியைப் போன்று பிஇ, பிடெக் மற்றும் பொறியியல் தொடர்பான பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறை கூடாது என்று தமிழக உயர்கல்வித்துறையின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல் படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த புதிய கல்விக் கொள்கை மீது பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு பின்னர் மாநில அரசுகள் தங்கள் கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடந்த மாதம் பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன் பேரில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறைகளின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்து விவாதித்து வந்த நிலையில், பொதுமக்களிடமும் கருத்து கேட்டுள்ளன. அதை அடிப்படையாக கொண்டு தமிழக உயர்கல்வித்துறை மத்திய அரசுக்கு, தமிழகத்தின் கருத்து மற்றும் பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை பல்கலைக் கழக மானியக் குழு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்விநிறுவனங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிர்வாக சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. 

மேலும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால், அனைத்து தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து பல்கலைக் கழகத்துக்கும் பல்கலைக் கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் செயலாளர் அபூர்வா, புதிய கல்விக் கொள்கை மீதான கருத்துரைகள், பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், பல்வேறு பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுகள்பற்றியும், புதிய கல்விக் கொள்கையின் படி அந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொறியியல்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதை ரத்து செய்துவிட்டு, நுழைவுத் தேர்வு என்ற நடைமுறையை கொண்டு வந்தால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்றும் அந்த கடிதத்தில் தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • 90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை



  • ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு



  • முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனு: டிச.7ம் தேதி சசிகலா விடுதலை?



  • விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ம் தேதி திமுக போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு



  • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்



  • ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு



  • பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]