இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி: பொதுமக்களுக்கு மார்ச்சில் விநியோகிக்க முடிவு

10/18/2020 6:22:41 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: ‘வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 20 முதல் 30 கோடி கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் தயாராக இருக்கும்’ என்று சீரம் இன்ஸ்டிடியூட்டின் (எஸ்ஐஐ) நிர்வாக இயக்குநர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார். உலகைேய முடக்கி வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீள, பல நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் ரோனாவை தடுக்க கூட்டாக ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது. தற்போது இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ், ஹீல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ‘பார்மா எக்சலன்ஸ்’ மின்னணு உச்சி மாநாட்டில் கூறியதாவது:

சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா, ‘ஆண்டுக்கு 70 கோடி முதல் 80 கோடி ‘டோஸ்’ வரையில் தடுப்பூசியை உற்பத்தி செய்கிற ஆற்றல் சீரம் நிறுவனத்துக்கு இருக்கிறது’ என்று கூறி இருக்கிறார். சீரம் நிறுவனம், இன்னும் கூடுதலான ‘டோஸ்’ தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். தடுப்பூசி உற்பத்தி செய்கிற 3 மருந்து நிறுவனங்களை பெற்றிருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம். அவற்றில் இரண்டு நிறுவனங்கள், தடுப்பூசியின் 3வது இறுதிக்கட்ட சோதனையை நடத்துகின்றன. மற்றொரு நிறுவனம், இரண்டாவது கட்ட பரிசோதனையை நடத்துகிறது.

எங்களது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகள், டிசம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் கிடைத்து விடும். தடுப்பூசி உரிமம் பெறுவதற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்படும். பொதுவாக ஒரு தடுப்பூசி சந்தைக்கு வருவதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் வரையில் ஆகும். ஆனால், கொரோனா தடுப்பூசி மிக சீக்கிரமாக தேவைப்படுகிறது. ஏற்கனவே 2009ல் ‘எச்1என்1 புளூ’ (பன்றி காய்ச்சல்) வந்த போது தேவைப்பட்ட போது, அதே ஆண்டின் டிசம்பரில் வந்து விட்டது. அதேபோல், எபோலா வரைஸ் ஆப்பிரிக்காவில் தொற்றிய போது, அதற்கான

தடுப்பூசி இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனையின்போது சந்தைக்கு வந்து விட்டது.
ஆனால் முதல் முறையாக கொரோனா வைரசை பற்றி பல நாடுகளுக்கும் எதுவும் தெரியாது. இந்தியாவில் டிசம்பர் இறுதியில் 20 கோடி முதல் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகிவிடும். இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் தந்தவுடன், தடுப்பூசி வெளியீட்டை தொடங்கி விடலாம். அனைத்து செயல்முறைகளும் எதிர்பார்த்தபடி நடந்துவிட்டால் மாதம் ஒன்றுக்கு 6 கோடி முதல் 7 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ள முடியும். இறுதிக்கட்ட பரிசோதனையின் தரவுகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் டிசம்பர் இறுதிவாக்கில் நாங்கள் அளித்து விடுவோம். 

அதில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு திருப்தி ஏற்பட்டால், அவசர பயன்பாட்டு உரிமத்தை (இயுஎல்) ஒரு மாதத்தில் வழங்கிவிடும். அதன்பின் சந்தையிடுவதற்கான அங்கீகாரத்தையும் வழங்கும். அதன்பிறகு உலக சுகாதார நிறுவனத்தை நாடி, மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்வோம். இதெல்லாம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சரியாக நடந்து விட்டால் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும். தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து முடிவதற்குள், பெருமளவில் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு நன்றி.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ் இந்த அறிவிப்பால், கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள இந்திய மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், டிசம்பர் தொடங்கி மார்ச்சுக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பது உறுதியாகி உள்ளதால், தொற்று பரவல் தடுப்பு நடவடக்கையில் இந்திய மருத்து தயாரிப்பு நிறுவனங்கள் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கும்.

மேலும் சில
  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



  • போதை பொருள் வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க கோரிக்கை வெடி பொருளுடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: பெங்களூருவில் பெரும் பரபரப்பு



  • மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி



  • போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு



  • ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி



  • தெலங்கானாவை புரட்டிப் போட்டது: கனமழைக்கு 35 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]