இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

10/16/2020 5:38:04 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த மாசி மாத பூஜைகளுக்கு பின்னர் பிப்ரவரி 18ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. கடைசியாக அன்றுதான் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பின்னர் ஐப்பசி மாத பூஜைகளின்போது பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளைமுதல் 5 நாட்களுக்கு ஐப்பசி மாத பூஜைகள் நடைபெறும். மேலும் நாளை முதல் வரும் 21ம் தேதிவரை தினமும் 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

நாளை காலை உஷபூஜைக்கு பின்னர் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஏற்கனவே நேர்முக தேர்வு மூலம் சந்நிதானத்துக்கு 9 பேரும், மாளிகைப்புரத்துக்கு 10 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 பேர் இரண்டு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் தலா ஒருவர் புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் மண்டல கால பூஜைகள் தொடங்கும் கார்த்திகை 1ம் தேதி புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்பர். அடுத்த ஓராண்டுக்கு இவர்கள் தலைமையில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களில் முக்கிய பூஜைகள் நடைபெறும்.முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளின்போது தினமும் 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆன்-லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்காக கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் உடல்தகுதி மருத்துவ சான்றிதழும் இருக்க வேண்டும்.

தரிசனத்துக்கு வருபவர்களில் சிலர் கொரோனா பாதித்து மீண்டவர்களும் இருக்கலாம். இவர்களுக்கு மலை ஏறும்போது உடல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதுபோல கொரோனா காரணமாக பலர் எந்த உடல்பயிற்சியும் செய்யாமல் வீட்டுக்குள் இருந்திருக்கலாம். இவர்களுக்கும் மலையேறும்போது பிரச்னைகள் ஏற்படலாம். எனவே சபரிமலை வருபவர்கள் மருத்துவரிடம், மலையேற உடல் தகுதி உள்ளதா என்ற பரிசோதனை சான்றிதழையும் கொண்டு வரவேண்டும். மலையேறும்போது முகக்கவசம் அணிய வேண்டாம். ஆனால் கூட்டம் கூட்டமாக செல்லக்கூடாது. கொரோனா நிபந்தனைகளுக்கு உட்பட்டே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். சன்னிதானத்தில் மிக நெருக்கமாக நிற்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

மேலும் சில
  • உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி



  • வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு



  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]